கிழக்கு திசையில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில தினங்களாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. தற்போது மார்ச் 10ஆம் தேதி முதல் தமிழகம் காரைக்கால் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு.. ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
முன்னதாக நேற்று காலை முதல் 24 மணி நேர கணக்கின்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலையை காணப்பட்டது. தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதி வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இதே நிலை நீடிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு..!