மும்பை தீவிரவாதத் தாக்குதில் முக்கியக் குற்றவாளியான தஹவூர் ராணா டெல்லியில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தினசரி அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடக்கிறது. தஹாவூர் ராணா தனக்கு திருக்குர்ஆன் நூல், பேப்பர், பேனா மட்டும் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதில் 166 பேர் கொல்லப்பட்டனர், 238 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்த நிலையில் அவரை இந்திய அதிகாரிகள் நாடு கடத்தி கடந்த வாரம் இந்தியா அழைத்து வந்தனர்.
இதையும் படிங்க: என்னை 'கசாப்' ஆக்கி விடாதீர்கள் ப்ளீஸ்… என்.ஐ.ஏ-விடம் கெஞ்சும் 26/11 குற்றவாளி ராணா..!
என்ஐஏ அதிகாரிகள் தஹாவூர் ராணா மீது வழக்குப்பதிவு செய்து, 18 நாட்கள் விசாரணையில் எடுத்துள்ளனர். டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்தில் இருக்கும் பிரத்யேக சிறையில் ராணா தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ராணாவுக்கு முறைப்படி மருத்துவப் பரிசோதனை, வழக்கறிஞர் உதவி கிடைக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ராணாவுக்கு மருத்துவப் பரிசோதனையும், அவரின் தனிப்பட்ட வழக்கறிஞர் நேற்று சந்திக்கவும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஏற்பாடு செய்தனர்.
தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ தலைமை விசாரணை அதிகாரி ஜெயா ராய் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே என்ஐஏ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில் “சிறப்பு சிறையில் இருக்கும் ராணாவிடம் தினசரி 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை அதிகாரிகள் தீவிரவாத தாக்குதலில் இருக்கும் பின்னணி குறித்து விசாரித்து வருகிறார்கள். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு ராணா பதில் அளிக்கிறார், விசாரணைக்கு ஒத்துழைத்து செயல்படுகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணா இதுவரை அதிகாரிகளிடம் பேப்பர், பேனா, திருக்குர்ஆன் நூல் ஆகியவை மட்டும் கேட்டுள்ளார். அதையும் அதிகாரிகள் அவருக்கு வழங்கியுள்ளனர். உணவு வகைகளைப் பொருத்தவரை ராணா எந்த உணவையும் குறிப்பிட்டு கேட்கவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவையே ராணா சாப்பிடுகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள தீவிரவாதத் தடுப்பு தலைமை அலுவலகத்தில் உள்ள சிஜிஓ காம்பிளக்ஸ் கட்டிடத்தில் உச்சக் கட்ட பாதுகாப்புடன் ராணா வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருக்கும், தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தாவுத் கோல்மெனுக்கும், ராணாவுக்கும் தொலைப்பேசி உரையாடல் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தும் முன், ராணா இந்தியாவுக்கு வந்து வடக்கு மற்றும் தென்மாநிலங்களுக்கு பயணித்துள்ளதாகத் தெரிவித்தள்ளார். இது தொடர்பாக ராணாவை அதிகாரிகள் விசாரித்ததில் முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர மும்பைத் தீவிரவாத தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா, ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி, ஹபிஸ் முகமது சயீத், ஜாகி உர் ரஹ்மான் லக்வி, சஜித் மஜித், இலியாஸ் காஷ்மீரி, அப்துர் ரஹ்மான் ஹசிம் சயித் ஆகிய முக்கிய நபர்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா, இவர்களுக்கு இதில் என்ன பங்கு குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: இந்தியா அழைத்துவரப்பட்டார் தஹவூர் ராணா.. 18 நாள் என்ஐஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி..!