பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருக்கமாகி வரும் வங்கதேசம், இந்திய எல்லையை ஒட்டிய பகுதியை கண்காணிக்க துருக்கி ராணுவத்திடமிருந்து “பேரக்தார் டிபி2” எனும் அதிநவீன ட்ரோன் விமானங்களை வாங்கியுள்ளது.
இந்த துருக்கி ட்ரோன்கள் மூலம்தான் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியை வங்கதேசம் கண்காணித்து வருகிறது, சமீபகாலமாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐயுடன் நெருக்கமாகி வருவது இந்தியாவுக்கு கவலையை அளித்துள்ளது.

இருப்பினும், இந்திய ராணுவமும், ரேராட் தொழில்நுட்பங்களை வலுப்படுத்தி, எல்லைப் பகுதியை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. ஏற்கெனவே தென்கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் மாலத்தீவுகள் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருகிறது. மேற்குத்திசையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூளைச்சாவு அடைந்த 2 வயது குழந்தை... உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த பெற்றோர்!!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்தபின், இந்தியா, வங்கதேசம் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கதேசம், பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான், வங்கதேசம் இடையே மீண்டும் வர்த்தகப் போக்குவரத்தும் தொடங்கியிருக்கிறது.

பாகிஸ்தானுடன் ராஜாங்கரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் வங்கதேசம் நெருக்கமாகி வருகிறது. இதனிடையே இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் வங்கதேசம், எல்லைப்பகுதியை கண்காணிக்க துருக்கி நாட்டிலிருந்து “பேரக்டார் டிபி2” எனும் ஆள் இல்லா விமானங்களை வாங்கியுள்ளது. இந்த ட்ரோன்களை வைத்து இந்திய எல்லைப்பகுதியை வங்கதேசம் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்தின் நடவடிக்கைகளை இந்திய உளவுத்துறை, ராணுவம், எல்லைப்பாதுகாப்படையினரும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
துருக்கி நாட்டின் பேரக்டார் டிபி2 ட்ரோன்கள் அதிக சக்திவாய்ந்தவை, தொழில்நுட்பத்தில் மேம்பட்டவை, வானில் 20 மணிநேரம் வரை தொடர்ந்து பறக்க முடியும். துருக்கி ராணுவத்தில் இந்த ட்ரோன்கள் சிறப்பான பணியைச் செய்து வருகின்றன, இந்த ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை வைத்து எதிரிகளின் இலக்கையும் சுட்டு வீழ்த்த முடியும், ஏவுகணை தாக்குதலும் செய்ய முடியும்.

வங்கதேசத்தின் நடவடிக்கையை கண்காணிக்க இந்தியாவும் ரேடார், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை பலப்படுத்தியுள்ளது. இதற்கிடையே வங்கதேசத்தின் பிரதமர் முகமது யூனுஸ் தற்போது பாகிஸ்தான் அரசுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வருகிறார், வங்கதேசத்தின் உளவுத்துறையும், பாகிஸ்தான் ஐஎஸ்ஐ பிரிவும் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் இருக்கும் பதற்றமான பகுதிகளைப் பார்த்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் உள்ள சிக்கன் நெக் பகுதியை பார்த்து சென்றுள்ளனர். பாகிஸ்தான் ராணுவமும், வங்கதேச உளவுத்துறை அதிகாரிகளும் அடிக்கடி சந்தித்து ஆலோசிப்பது குறித்து இந்திய ராணுவத் தலைவர் உபேந்திர திவேதி சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: UNO-வில் எதிரொலித்த மணிப்பூர், காஷ்மீர் விவகாரம்.. ஆதாரமற்றது என இந்தியா பதிலடி..!