உச்சநீதிமன்றம் குறித்து விமர்சித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் பதில் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெகதீப் தன்கரின் கருத்து குறித்து தான் வருத்தம் அடைந்ததாக கூறினார். இன்றைய காலகட்டத்தில், நாடு முழுவதும் நம்பகமான துறையாக நீதித்துறை இருப்பதாகவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் நீதித்துறையின் முடிவுகள் பிடிக்காதபோது, அதன் வரம்புகளை மீறுவதாகக் குற்றம் சாட்டத் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு முழு நீதி வழங்கும் உரிமையை வழங்கியுள்ளது என்பது தெரியுமா என கேள்வி எழுப்பிய அவர், குடியரசு தலைவர் ஒரு பெயரளவுத் தலைவர் மட்டுமே தான் என்றும் குடியரசு தலைவர் அமைச்சரவையின் அதிகாரம் மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்படுகிறார் என்றும் விளக்கமளித்தார். குடியரசு தலைவருக்கு தனக்கென எந்த தனிப்பட்ட அதிகாரமும் இல்லை என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தோல்வியடைந்த, செயல்படாத அமைப்பு.. கொந்தளிக்கும் கபில் சிபல்.. எதிர்கட்சிகளுக்கு அழைப்பு.!!
இதையும் படிங்க: வக்ஃபு மசோதா சட்டவிரோதமானதா? நான் ராஜினாமா செய்வேன்..! சவால் விட்ட பாஜக எம்.பி.!