காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் தெரிவித்திருப்பதாவது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. அனைவருக்குமான அரசு, அனைவரின் வளர்ச்சியை உள்ளடக்கிய அரசு எனும் கூறும் மத்திய அரசு, சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பிரிவினரை கிண்டல் செய்கிறது.

• கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் எஸ்.சி மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை 57 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
• ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை 5 ஆண்டுகளில் 77% குறைக்கப்பட்டுள்ளது.
• சிறுபான்மை மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை கடந்த 4 ஆண்டுகளில் 94 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
• எஸ்சி பிரிவு மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை 9 ஆண்டுகளில் 13 சதவீதம் குறைந்துள்ளது.
• எஸ்டி பிரிவு மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை 10 ஆண்டுகளில் 21 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
• ஓபிசி, இபிசி, டிஎன்டி திட்டத்தில் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை 10 ஆண்டுகளில் 58 சதவீதம் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸில் இணைகிறாரா விஜய சாய் ரெட்டி? காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவுடன் திடீர் சந்திப்பு

• சிறுபான்மை மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை 4 ஆண்டுகளில் 83 சதவீதம் குறைந்துள்ளது.
• எஸ்சி, ஓபிசி மாணவர்களுக்கான இலவச பயிற்சி திட்டத்துக்கான நிதி கடந்த 5 ஆண்டுகளில் 83 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
• எஸ்சி மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை(NFSC) 9 ஆண்டுகளில் 53 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
• மெரிட்டில் தேர்ச்சி அடையும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 4 ஆண்டுகளில் 51% குறைக்கப்பட்டுள்ளது.
• எஸ்டி மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை கடந்த 9 ஆண்டுகளில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கல்வி உதவித்தொகையைக் குறைத்தால் விளிம்பு நிலையில் இருக்கும் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு எவ்வாறு பெருகும், எவ்வாறு வாய்ப்புப் பெறுவார்கள், அவர்களின் திறமை எவ்வாறு மெருகேரும். நரேந்திர மோடிஜி, உங்கள் அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையையும் பறித்துவிட்டது. அரசின் வெட்கக்கடான புள்ளிவிவரங்கள், மோடி அரசு குறைத்த அனைத்து கல்வி உதவித்தொகையையும் மட்டும் காண்பிக்கவில்லை, சராசரியாக செலவு செய்யும் தொகையையும் 25 சதவீதம் குறைத்துள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் வாய்ப்புப் பெறாதவரை,அவர்களின் திறமை அங்கீகரிக்கப்படாது. அப்படியிருக்கும்போது, எவ்வாறு தேசத்தின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்