தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் ரூ.46,767 கோடிக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்து அசத்தலான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் மகளிர் உரிமை தொகை, சுய உதவிக்குழு, தோழியர் விடுதி, குடிநீர் விநியோகம் என பெண்களுக்கு பலனளிக்கும் திட்டங்களுக்கும் கனிசமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெண்களுக்கான பட்ஜெட்:-
- ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு
- ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு
- ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு
- 3ஆம் பாலினத்தவரை ஊர்க்காவல் படையில் சேர்த்து பயிற்சியளித்து பணி வழங்கப்படும்
- நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி
- பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் ரூ.46,767 கோடி ஒதுக்கீடு
- அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் உயர்த்த ரூ.500 கோடி ஒதுக்கீடு
- சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்

- பல்கலைக்கழகங்களின் தொகுப்பு நிதி ரூ.200 கோடியாக உயர்த்தி அறிவிப்பு
- உயர்கல்வியில் மாணவர்கள் விரும்பி எடுக்கும் பாடங்களில் கூடுதலாக 15000 இடங்கள்
- திறன்மிகு வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் உருவாக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு
- ரூ.2500 கோடிக்கு கல்விக்கடன் வழங்கப்படும்
- தமிழக மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற பயிற்சி அளிக்க ரூ.10 கோடி நிதி
- உயர்க்கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ.152 கோடி செலவில் தமிழகத்தில் 4 தொழில் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்
- தமிழகத்தில் புதிதாக 10 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் நிறுவப்படும்
- பள்ளி பாட புத்தகத்தில் செஸ் விளையாட்டு குறித்து பாடம் இடம்பெற ஏற்பாடு
- அரசு கல்லூரியில் AI உள்ளிட்ட வளர்ந்துவரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
- புதிய பட்டப்படிப்புகளுக்காக ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும்
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2025... இதெல்லாம் கவனிச்சீங்களா..?