மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இருபெரும் நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மியான்மர் நாட்டில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாங்காக் நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமாட்டமாகின. நிலநடுக்கத்தால் அலறி துடித்த மக்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர். இருப்பினும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்தது. இது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலநடுக்கம் பாதிப்பு..! மியான்மர், தாய்லாந்துக்கு உதவிக்கரம் நீட்டிய பிரதமர்..!

இதேபோல் சீனாவின் தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள இம்பால், கொல்கத்தா ஆகிய நகரங்களில் லேசான அதிர்வுகளை உணர முடிந்ததாக கூறப்பட்டது.இதில், 91 வருட பழமையான பாலம், கோவில், அடுக்குமாடி கட்டடங்கள் வரை பல்வேறு கட்டுமானங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 4.2 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே நேற்று பிற்பகலில் ஏற்பட்ட 2 நிலநடுக்கங்கள் கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் நள்ளிரவில் நிகழ்ந்த நிலநடுக்கம் மியான்மர் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது.

இதனுடையே, நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மியான்மருக்கு, அவசர உதவியாக, 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் கூடாரம், படுக்கை விரிப்புகள், போர்வைகள், உணவு பொருட்கள், நீர் ஆகாரங்கள் உள்ளிட்ட முக்கிய நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: தாய்லாந்து மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சரிந்த கட்டிடங்கள்; குவிந்த சடலங்கள்!!