மத்திய அரசு நிறைவேற்றிய வக்ஃபு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வழக்கறிஞர் கபில் சிபலிடம் கூறுகையில் “நீதிமன்றத்தில் ஒருமுறை இருக்கிறது, அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றால், மின்அஞ்சல் அல்லது எழுத்துபூர்வமாகவோ விண்ணிப்பிக்கலாம். இதை தலைமை நீதிபதி ஆய்வு செய்து முக்கியத்துவம் உணர்ந்து வழக்கை நீதிபதிகளுக்கு ஒதுக்குவார். இன்று பிற்பகலில்தான் எனக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு செயல்முறை இருக்கும்போது, அவசர வழக்காக விசாரியுங்கள் என குறிப்பிடாதீர்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதிர்த்தாலும், முதல்ல அமல்படுத்துவோம்..! வக்ஃபு சட்டத்தை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை..!
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, சமஸ்தா கேரள ஜமாய்துல் உலேமா சார்பில் வழக்கறிஞர் ஜூல்பிகர் அலி, மக்களவை எம்.பி. ஒவைசி சார்பில் வழக்கிஞர் நிஜாம் பாட்சா, மக்களவை எம்.பி. முகமது ஜாவித் சார்பில் வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் ஆகியோர் சேர்ந்து அவசர வழக்காக இதை விசாரிக்க மனு அளித்தனர்.

மனுதாரர்கள் தங்கள்மனுவில் குறிப்பிடுகையில் “ வக்ஃபு சொத்துக்களை நிர்விக்க தன்னிச்சையான நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லிம சமூகத்துக்கென இருக்கும் மதஇறையான்மையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் 300ஏ பிரிவின் கீழ் சொத்துக்கள் வைத்திருக்கும் உரிமை பாதுகாக்கப்படுகிறது.
வக்ஃபு சொத்துக்கள் மீது அரசின் கட்டுப்பாட்டை அதிகப்படுத்துவதன் மூலம், மத நோக்கங்களுக்காக தனிநபர்கள் சொத்துக்களை அர்ப்பணிக்கும் மனப்போக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கிறது. வக்ஃப் சொத்துக்களை அதிக ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலமும், மதச் சொத்துக்களின் கட்டுப்பாட்டை மதச்சார்பற்ற அதிகாரிகளுக்கு மாற்றுவது மத மற்றும் சொத்துரிமைகளை மீறுவதாகும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்தச் சட்டம் செயல்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மத அறக்கட்டளைகளின் நிர்வாகத்தில் இல்லாத கட்டுப்பாடுகள் அனைத்தும் வக்ஃபு வாரியத்துக்கு மட்டும் விதிக்கப்பட்டு, சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையான சமத்துவ உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் அதிகமான அளவு உறுப்பினர்கள் நியமிக்கலாம் என்ற விதி என்பது மதசுதந்திரத்தில் தேவையின்றி வேறு நபர்களை தலையிட வைப்பதாகும். இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாத நிலையில் இங்கு எப்படி தலையீடு கொண்டுவரலாம்.
வக்ஃபு சொத்துக்களில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதை முஸ்லிம் சமூகம் தீர்க்கும் என்ற நிலை மாறி, மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் சொத்துக்கள் வரும் என்பது வக்ஃபு வாரியத்தின் சுயாட்சியை குலைப்பதாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வக்ஃபு மசோதாவை எதிர்த்த 300 முஸ்லிம்களுக்கு நோட்டீஸ்: உ.பி. போலீஸார் நடவடிக்கை..!