மும்பை பங்குச்சந்தை இன்று மாலை வர்த்தகம் முடிவில் 1.90 சதவீதம் அல்லது சென்செக்ஸ் (sensex) 1,420 புள்ளிகள் குறைந்து, 73,192 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் 418 புள்ளிகள் சரிந்து, 22126 புள்ளிகளில் முடிந்தது. தொடர்ந்து 5வது மாதமாக பெஞ்ச் மார்க் சரிந்து வருகிறது, கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவாக நீண்டநேரம் பங்குச்சந்தை சரிவிலேயே இருந்தது.

இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.8.80 லட்சம் கோடி குறைந்துள்ளது. இன்போசிஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, பார்தி ஏர்டல், விப்ரோ, டெக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் மதிப்பு 5 முதல் 7சதவீதம் சரிந்தன. ஹின்டால்கோ, டிரென்ட், எச்டிஎப்சி வங்கி, கோல் இந்தியா பங்குகள் மதிப்பு 2 சதவீதம் வரை உயர்ந்தன.நிப்டியில் ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கிகள், சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆகிய துறைகள் 4 சதவீதம்வரை சரிந்தன.
இதையும் படிங்க: டெல்லியை கையில் எடுத்த அமித்ஷா..! கிரிமினல்களை தெறிக்கவிட முடிவு..!
பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்ன?
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் தொடர்ந்து குறைந்து வருவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் மார்ச் 4ம் தேதி முதல் கனடா, மெக்சிக்கோ மீது கூடுதல் வரியும், சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்ற அறிவிப்பு சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

இது தவிர இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துவருவதும், அமெரிக்க பங்குப்பத்திரங்கள் மீது முதலீடு அதிகரிப்பதும், சீன, அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடைந்து வருவதும் இந்தியச்சந்தைகள் சரிவுக்கு காரணம்.
அது மட்டுமல்லாமல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தபின், இந்தியச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை அமெரிக்கசந்தையில் முதலீடு செய்வதும், பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது.

சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை, அரசின் ஆதரவு போன்றவற்றால், நம்பகத்தன்மையான இடத்துக்கு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை மாற்றும் போக்கில், இந்தியச்ச ந்தையில் இருந்து முதலீ்ட்டை எடுத்து சீனச் சந்தையில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருவதும் சந்தையில் வீழ்ச்சி ஏற்படக் காரணமாகும். பிப்ரவரியில் மட்டும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.47349 கோடிக்கு பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர்.
ஜியோஜித் பைனான்சியல் அமைப்பின் தலைமை முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில் “ அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்ததில் இருந்து இந்தியச்சந்தையில் நிலையற்ற போக்கு காணப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் அறிவித்த வரி உயர்வு, இன்னும் மோசமான தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்துகின்றன.
இதையும் படிங்க: 75 ஆயிரம் போலீசாருக்கு 10 ஆயிரம் போனஸ்; ஒரு வாரம் விடுப்பு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்...!