கோடை காலம் தொடங்கியதி இருந்தே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், மதுரை போன்ற பகுதிகள் எல்லாம் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் காற்று சுழற்சியின் காரணமாக வளிமண்டலத்தின் காற்றின் போக்கில் வேகமான மாறுபாடு காரணமாகவும், ஈரப்பதம் மிகுந்தகிழக்கு காற்றின் வருகையின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் முதலே தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை தொடங்கிய சூழல்ல, தற்போது இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் அப்டேட்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

மாநிலம் முழுவதுமே பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ம் தேதி வரை மழைப்பொழிவு தொடர்வதற்கான சூழல் உள்ளது. அதாவது ஏப்ரல் ஆறாம் தேதி முதல் அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகுது, அந்த காற்று சுழற்சியின் விளைவாக ராஸ்பி அலைவு என்று சொல்லக்கூடிய கடல் சார்ந்த ஈரப்பதம் சாதகமாக இருப்பதால் அடுத்து வரக்கூடிய சில நாட்களில் பகல் நேரங்களில் வெப்பமான சூழ்நிலை நிலவினாலும், மாலை, இரவு, நள்ளிரவு நேரங்களில் இடிமின்னலுடன் கூடிய மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை! வானிலை மையத்தின் புது அப்டேட்...