சென்னை கே.கே. நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஒரு கட்சி., இன்னொரு கட்சியை தன்னோடு கூட்டணிக்கு அழைப்பது என்பது இயல்பான ஒன்று தான் என கூறினார். திமுக விற்கும் அதிமுகவிற்கும் ஊழலில் வித்தியாசம் இல்லை என்றும் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான், அதிமுகவில் மட்டும் ஊழல் இல்லாமல் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு.. ஒரே நிலைப்பாடு தான்., கூட்டணி எங்கள் கொள்கை அல்ல என கூறினார். தேர்தல், கட்சி அரசியல் செய்யும் கட்சிகளுக்கு தான் கூட்டணி, நாங்கள் மக்கள் அரசியல் செய்கிறோம் என சீமான் தெரிவித்தார். வெற்றி, தோல்வியை தாண்டி ஐந்தாவது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியாக தான் இருக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீமானுக்கு டாடா... பாஜகவுக்கு தாவும் சாட்டை துரைமுருகன்? - தம்பிகள் கதறல்..!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் யதார்த்தமானவர். இயல்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார்.,அதை இவ்வளவு பெரிய விஷயமாக ஆக்க வேண்டாம் என பேசினார். எங்களுடைய பயணம் எங்களை கால்களை நம்பி தான் உள்ளது என்றும் எங்கள் விடுதலை எங்கள் கையில் தான் அடுத்தவர் தோள்களை நம்பி எங்களின் பயணத்தை தொடங்கினால் எங்கள் இலக்கை நோக்கி அந்த பயணம் போகாது என பேசினார்.
இதையும் படிங்க: சாட்டையால் தாக்கப்பட்ட அந்த 2 வீடியோ… 'அண்ணாச்சிக்காக' தம்பி மீது கடுப்பான அண்ணன் சீமான்..!