கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு நேரத்திலும், பாலூட்டும் தாய்மார்களுக்காகவும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை அங்கன்வாடிப் பணியாளர்கள் வாயிலாக மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசின் உத்தரவால், ஊட்டச்சத்துப் பொருட்களை பெறுவதற்குகூட கர்ப்பணிகளை மத்திய அரசு அலைய வைக்கிறது.
ஊட்டச்சத்து பொருட்களைப் பெறுவதற்கு முன் அங்கன்வாடிப் பணியாளர்கள் கர்ப்பணிப் பெண்களின் புகைப்படத்தை செயலியில் பதிவேற்றம் செய்தபின்தான் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்பதால் பல்வேறு சிக்கல்களை கர்ப்பணிகள் எதிர்கொள்கிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்களை புகைப்படம் எடுக்கும் அங்கன்வாடிப் பணியாளர்கள் செல்போனில் நெட்ஒர்க் கிடைக்காமல், இணையம் மெதுவாகவும் இருப்பதால் புகைப்படத்தை குறித்த நேரத்துக்குள் பதிவேற்ற முடியவில்லை. இதனால் கர்ப்பணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகளுடன் இருப்போர் 45 நிமிடங்கள் வரை புகைப்படம் அப்லோடிங்கிற்காக காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களை டாக்டர்கள் செக் செய்யும் வீடியோக்கள் ..! 2000 ரூபாய்க்கு விற்றது அம்பலம்..! குஜராத்தில் கொடூரர் 4 பேர் கைது..!
அங்கன்வாடிப் பணியாளர்களிடம் இருக்கும் பழைய மொபைல் போனில் புகைப்படமும் எடுக்க முடியவில்லை, எடுத்த புகைப்படத்தை அப்லோடும் செய்ய முடியாமல் பணியாளர்கள் தவிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்துப் பொருட்களை வீ்ட்டுக்கு கொண்டு செல்லலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த போஷான் திட்டத்தில் பதிவு செய்ய கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆதார் கார்டு, மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகே இருக்கும் அங்கன்வாடியில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், விவரங்களை பதிவு செய்தாலும் கர்ப்பிணிகளின் புகைப்படத்தை அப்லோடு செய்வதில் சிக்கல் நீடிப்பதால், பெரிய சிரமத்தை அங்கன்வாடி ஊழியர்கள் சந்திக்கிறார்கள்.

கோடம்பாக்கத்தில் இருக்கும் அங்கன்வாடி ஆசிரியை ஒருவர் கூறுகையில் “ ஒவ்வொரு மாதமும் ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வரும் கர்ப்பிணிகளையும், தாய்மார்களையும் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வது சாத்தியமில்லாதது. சர்வர் மெதுவாக இருக்கிறது, சில நேரங்களில் செயல்படுவதில்லை. இதனால் கர்ப்பணிகள் தேவையின்றி ஒருமணிநேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியைகள் தங்களின் சொந்த மொபைல்போனில் விவரங்களை பதிவேற்றம் செய்ய முயல்கிறார்கள். அதிலும் பெரும்பாலான ஆசிரியைகள் பழைய மொபைல் வைத்திருப்தால் அந்த மொபைலிலும் சிக்கல் நீடிக்கிறது. சமூக நலத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய ஸ்மார்ட் போன் வைத்துதான் பதிவேற்றம் செய்கிறார்கள். அதிலும் மெமரி போதவில்லை என்பதால் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது கடினமாக இருக்கிறது.

இதற்கு முன் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ரேஷன் அட்டை கொண்டுவந்து பதிவு செய்துவிட்டு, ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெற்றுச் செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் வரஇயலாவிட்டால் நாங்கள் சென்று வழங்குவோம். இப்போது கர்ப்பிணிகள் நேரடியாக அங்கன்வாடி செல்ல வேண்டியதுள்ளது” எனத் தெரிவித்தார்.
8 மாத கர்ப்பிணி திவ்யா கூறுகையில் “ எங்கள் வீட்டில் இருக்கும் வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வந்தால், 60 நிமிடங்கள் வரை புகைப்படம் எடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. சர்வர், இன்டர்நெட் மெதுவாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களுக்குள் இந்த ஊட்டச்சத்து பொருட்களைப் பெற வேண்டும், இதற்காக எங்களுக்கு முந்தைய மாதத்தின் கடைசியிலிருந்தே நினைவூட்டலுக்காக தொலைப்பேசி அழைப்பு செய்கிறார்கள். இதுபோன்று செல்போனில் பேசுவதும் தொந்தரவாகவும், இரவு நேரத்தில் வரும் செல்போன் அழைப்பால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.
புகைப்படம் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவு, கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை..! 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு..!