தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒபி.ரவீந்திரநாத், 'ஓ பி ஆர் கரம் கோர்ப்போம்' என்கின்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் ஓபிஆர் ரவீந்திரநாத் இணைய போவதாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது அவர் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளது
ரவீந்திரநாத் அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகுத்து வந்தவர். 2019 ஆம் நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனார். தமிழ்நாட்டில் மற்ற அனைத்து தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற தேனியல் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடிக்க நீதிமன்றத்துக்கு சென்றார் ஓபிஎஸ்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் மனுவில் தவறான தகவல்களை குறிப்பிட்டதாக கூறி அவரின் பதவி பறிபோன நிலையில் முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துகளால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி தான்.! வீடு வீடா போங்க.. மீண்டும் உறுதி செய்த த.வெ.க விஜய்!
இதனை அடுத்து ஓபி ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது பதவிக்காலம் முடிவடையவே 2024 ஆம் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடவில்லை.
முன்னதாக அதிமுகவிலிருந்து இவரது தந்தையான ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், பெங்களூரு புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். தந்தையுடனே பயணித்த ரவீந்திரநாத் பெரும்பாலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் தான் ரவீந்திரநாத் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்தன. அதன்படி விஜய்யின் தீவர ரசிகரான அவர் விஜய் கட்சி தொடங்கியதும் வாழ்த்து கூறும் வரிசையில் முதல் ஆளாக இடம் பிடித்தார். இதனை அடுத்து கிசுகிசுக்கள் கருத்துகளாக உருப்பெற்றது. விஜய் கட்சி தொடங்கிய பின் ரவீந்திரநாத் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக பரவலாக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.
தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், ரவீந்திரநாத் ஓ பி ஆர் கரம் கோர்ப்போம் என்கிற புதிய அமைப்பை தொடங்கியதுடன் அதற்கான லட்சியினையும் அவரது பிறந்த நாளான நேற்று வெளியிட்டார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்த தானத்தை முன்னிறுத்தி அமைக்கப்பட்ட இந்த அமைப்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாக்கும் விதமாக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அமைப்பில் சேர்வதற்கான இணையதளம் மற்றும் எண்களை அறிவித்து அமைப்பில் சேர்வதற்கான அழைப்பையும் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர்கள் செல்போன் பறிமுதல்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!