''நம்ம சோஷியல் மீடியா படை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படைன்னு சொல்றாங்க " என தவெக தலைவர் விஜய் பெருமைப்பட்டுள்ளார்.
தவெக தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது காணொலி வாயிலாக பேசிய விஜய், ''இந்தச் சந்திப்பு நடக்கும்போது ஜூம் கால் மீட்டிங்கில் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது திட்டம்.

ஆனால், கொஞ்சம் நெட்வொர்க் பிரச்சனை இருப்பதால் அதை என்னால் செய்ய முடியவில்லை. அதனால் தான் இந்த பதிவு செய்யப்பட்ட செய்தியை அனுப்புகிறேன். இந்த ரெக்கார்டர்ட் கட்சியின் மூலம் உங்களை சந்திப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். நம்மளுடைய இந்த சோசியல் மீடியா படை... அதுதான் வந்து இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: பாமக- தவெக கூட்டணிக்கு ராமதாஸ் வைத்த டிமாண்ட்.. இ.பி.எஸை தெறிக்க விட்ட விஜய், அன்புமணிக்கு அடங்குவாரா..?
இதை நாம் சொல்வதைவிட, மற்றவர்களை அதை பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். இனிமே நீங்கள் எல்லோரும் எனது சோசியல் மீடியா ஃபேன்ஸ் மட்டும் கிடையாது. என்னை பொருத்தவரையில் நீங்கள் எல்லாருமே என்னுடைய கட்சியின் 'விர்ச்சுவல் வாரியர்ஸ்' அப்படித்தான் நான் எல்லோரையும் கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஓகே தானே. பிடித்து இருக்கிறது தானே...

நம்முடைய ஐடி விங் என்றாலே டீசன்டாக இருக்கிறார்கள் என்று எல்லோருமே சொல்லணும். அதை மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்யுங்கள். கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டமானது ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகிய தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது. கட்சி கொள்கை மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சீட் வேணும் என்றால் விஜய் கட்சிக்கு செல்லுங்கள்... நானே சேர்த்து விடுகிறேன் - சீமானின் பரபரப்பு ஆடியோ...!