பீர் பஞ்சால் பிராந்தியத்தின் தெற்கே உள்ள கட்டுப்பாட்டு கோட்டில் எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு தம் அவர்கள் கடந்த 10 நாட்களில் அதிகரித்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தீவிரவாதிகளை ஒரு ரோஜா செய்வதற்காக இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகிறது. உடனுக்குடன் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து ஊடுருவல் முயற்சியை முறியடித்து வருகிறார்கள்.. பிப்ரவரி 2021ல் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் போர் நடத்த ஒப்பந்தத்தை மீண்டும் உறுதிப்படுத்திய நான்கு ஆண்டுகளுக்கு இந்த தாக்குதல் நடந்து வருகின்றன.

கவர்னர் உறுதி: இந்த நிலையில் ஜம்முவில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி ஒன்றை துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். அப்போது, எல்லையில் சமீப காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,
இதையும் படிங்க: 7 பேரால் சிதைக்கப்பட்ட சிறுமி! மாணவர்கள் போர்வையில் காம அரக்கன்கள்! கோவையில் கல்லூரி மாணவர்கள் கைது!
இதற்கு மனோஜ் சின்ஹா பதில் அளிக்கையில், “எல்லையில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் முழு ஆற்றலுடன் இந்திய ராணுவம் உள்ளது. எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதில் பாகிஸ்தான் தரப்பில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸாரும் பிற பாதுகாப்பு படையினரும் மிகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டவும் இந்த சூழலை முடிவுக்கு கொண்டு வரவும் அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இருக்காது. ஏனெனில் ஜம்மு-காஷ்மீரில் அமைதியை பேணுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு... தீயாய் களத்தில் இறங்கிய தங்கம் தென்னரசு...!