திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் குமுளி சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இதனை எடுத்து சேவகம் பட்டியில் சுங்கவரி வசூலிப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அப்பகுதியில் சுங்க சாவடி அமைக்கப்பட்டது.
இதனை எதிர்த்த அப்பகுதி மக்கள் சிலர், இரு வழி சாலைக்கு சுங்கச்சாவடி வசூலிப்பது முறையற்றது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து தனியார் நிறுவனம் தடையை நீக்க பல்வேறு வழக்குகளை தொடர்ந்தது. அப்போது நிலக்கோட்டை டிஎஸ்பியாக பதவி வகித்து வந்த முருகன், சாலை பணியை முழுமையாக நிறைவு பெற்ற பின்னர் கட்டணம் வசூலிக்கலாம் என வாக்குறுதி கொடுக்கவே, சாலை பணிகள் தீவிர படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: தெருநாய் கடித்ததால் விபரீத முடிவு? நாய் போல் குரைத்ததால் மன உளைச்சல்.. அரசு மருத்துமனையில் நடந்த பகீர் சம்பவம்..
இதன் அடிப்படையில் இன்று சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிப்பு கடிதத்தை தனியார் நிறுவனமானது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மாவட்ட எஸ்பி, நிலக்கோட்டை டிஎஸ்பி, தாசில்தார், பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு வழங்கியது. மேலும் அந்த அறிவிப்பில் பாதுகாப்பு வழங்கும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த செய்தி குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், காலையில் திறக்கப்படவிருந்த சுங்க சாவடியை சுற்றி வளைத்து முற்றிலுமாக சேதப்படுத்தினர். எட்டு மணிக்கு துவக்க விழா நடைபெறவிருந்த நிலையில், அப்பகுதி மக்கள் அதற்குள்ள அதற்குள்ளாகவே உங்க சாவடியை அடித்து நொறுக்கினர்.
இதனால் சுங்க சாவடியில் வாகன கட்டணம் வசூல் செய்யப்பட்டது பாதையிலேயே நிறுத்தப்பட்டது. உனதாக தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக பயன்பாட்டிற்கு வரவிருந்த சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பகுதியில் பெரும் சலசலப்பை படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உரிமைப் பங்கு வெளியீட்டு கால அளவை குறைத்தது SEBI.. ஏப்ரல் 7 முதல் அமல்..!