தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கமல் புறம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோம்பை இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென நாய் காணாமல் போயுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தேடிய சுரேஷ்குமார், தோப்பு பகுதியில் நான் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து எந்த நோயும் இல்லாமல் மர்மமான முறையில் நாய் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் குமார், நாயை தூக்கி பார்த்த போது நாயின் உடலில் ஐந்து இடங்களில் பால்ராஸ் குண்டுகள் துளைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து சுரேஷ்குமார் அக்கம் பக்கம் விசாரித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரையில் அரங்கேறிய பயங்கரம்.. திமுக நிர்வாகி வெட்டி படுகொலை..
அதில் அவர் சுரேஷ்குமாரின் பக்கத்து வீட்டை சேர்ந்த அருண் என்பவர், நாய் குறைத்ததில் ஆத்திரம் அடைந்து அவர் வைத்திருந்த ஏர்கன் மூலம் நாயை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், சோழபுரம் போலீசார் இது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் மற்றும் ப்ளூ கிராஸ் அமைப்பினர் சுரேஷ்குமார் மற்றும் அருண் இடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அருண்குமார் நாயை சுட்டு கொன்றதாக வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெற்றோரின் சண்டையால் நேர்ந்த கொடூரம்..! மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்தியப் பெண்..!