மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவரது இந்த கருத்துக்கு ஆந்திரா - தெலங்கானாவில் செயல்பட்டு வரும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த நினைக்கிறது. அதற்கு அடிப்படையாக மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை திட்டமிடுவதுதான் இதன்பணி. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும். மாறாக உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் கூடுதல் தொகுதிகளை பெறும் வாய்ப்பு ஏற்படும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் எட்டு எம்.பி. தொகுதிகள் குறைப்பா..? கொந்தளிக்கும் திமுக கூட்டணி கட்சி..!

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. வருகிற மார்ச் 5-ந் தேதி இதற்கான கூட்டம் நடைபெற உள்ளது. மொத்தம் 45 கட்சிகளுக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய இந்த கருத்துக்கு, பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் கே.டி.ராமாராவ் (முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன்) ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மு..கஸ்டாலின் கருத்துடன் முற்றிலும் உடன்படுவதாகவும் ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார். மக்கள்தொகை பெருக்கத்தை அமல்படுத்திய தென்மாநிலங்கள் நீங்கள் தண்டிக்க முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தென்மாநிலங்களின் முயற்சியை கருத்தில் கொள்ளாமல் மறுவரையறை செய்வது ஜனநாயத்திற்கோ, கூட்டாட்சிக்கோ பொருந்தாது என்றும் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார். அப்படி நீங்கள் மறுவரையறை தான் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தால் மத்திய அரசுக்கு எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு நிதிப்பங்களிப்பு செய்கிறதோ, அதற்கு தக்கவாறு மறுவரையறை செய்யுங்கள் என்ற திட்டத்தை நான் முன்மொழிகிறேன் என அவர் கூறியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பியதில் தெலங்கானா மற்றும் தென்மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் தெலங்கானா 2.8% மட்டுமே உள்ளது ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2% க்கும் அதிகமாக பங்களிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழக நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டம்.. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு...