மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக, ஆட்சியின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் படி திமுக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வேறுபாட்டை மறந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மதுரையில் மீண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இறுதி சுமார் 20 ஆண்டுகள் வரலாற்றில் மதுரை மாவட்டத்தில் நமக்கு அந்த அளவுக்கு பெரிய வெற்றி பெற்றதில்லை. இருக்கிற 10 தொகுதியில் 2016 தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். எனவே இந்த இலக்கை இந்த முறை உறுதியாக அடைவோம் என்று கருதி நீங்கள் எல்லாரும் கருதி, வேறுபாட்டை விட்டுவிட்டு ஒற்றுமையாக செயல்பட்டு என மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் பிடிஆர் அறிவுரைக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த சோகம்..!
ஒரு கட்சியை நடத்துவதற்கு அடிப்படை திராவிட இயக்கத் தத்துவத்தின் இன்றைக்கு செயல்பாடாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திறமை வாய்ந்த பல்வேறு பொறுப்புகளை வெவ்வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளார். சிலருக்கு திரளாக கூட்டம் கூட்டும் சிறந்த செயல் திறன் இருக்கும், சிலருக்கு ஊடகத்தில் சிறப்பாக பேச திறமை இருக்கும், சிலருக்கு சிறப்பாக நிர்வாகம் செய்ய திறமை இருக்கும், சிலர் விளம்பரத்தில் சிறப்பாக இருப்பார்கள். ஆனால் ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு தத்துவ இயக்கத்துக்கு இருக்கலையே முக்கிய இலக்கும். அதை செயல்படுத்தும் திறமையும் தேர்தலில் வெற்றி பெறுகிறது.

ஏனென்றால் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் ஆட்சியை அமைக்க முடியாது. ஆட்சியை அமைக்காவிட்டால் நம் கொள்கையின் அடிப்படையில் எந்த நிதியும் ஒதுக்கி திட்டம் மற்றும் சட்டம் உருவாக்கி சமுதாயத்தின் மாற்றத்தை கொண்டுவர முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால் இறுதி சுமார் 20 ஆண்டுகள் வரலாற்றில் மதுரை மாவட்டத்தில் நமக்கு அந்த அளவுக்கு பெரிய வெற்றி பெற்றதில்லை. இருக்கிற 10 தொகுதியில் இன்னும் குறிப்பாக 2016 தேர்தலில் 10 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகள் தான் வெற்றி பெற்றோம். 2021 தேர்தலில் பத்தில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றோம். மாநில சராசரியை பார்த்தால் இது குறைவாகத்தான் இருக்கிறது.
அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது பல தொகுதிகளில் 100% வெற்றி பெற்ற சூழ்நிலையில், மேற்குத் தொகுதியில் சுமார் 30 சதவீத மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறவில்லை. எனவே இந்தக் கூட்டம் சிறப்பாக அமைந்திருக்கு நல்ல ஆரம்பம் என்று நான் கூறினாலும், மூன்று முறை தொடர்ந்து இந்த தொகுதியில் மாற்றுக் கட்சி வெற்றி பெற்றிருக்கிற சூழ்நிலையில் நம்மளுக்கெல்லாம் உழைப்புக்கு இது ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். எந்த தொகுதியிலும் தொடர்ந்து மூணு நாலு முறை தோல்வி அடைந்த பிறகு மாற்றத்தை உருவாக்குவது கூடுதல் கடினமாக இருக்கும்.

எனினும் மூர்த்தி திறமை வாய்ந்தவர். எனவே இந்த இலக்கை இந்த முறை உறுதியாக அடைவோம் என கருதுகிறேன். நீங்கள் எல்லாரும் வேறுபாட்டையும் விட்டுவிட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஏனென்றால் எனது அனுபவம் என்னவென்றால், கழகத்தில் எல்லோரும் எந்த அளவிற்கு ஒற்றுமையோடு செயல்படுகிறோமோ, அங்கு எல்லாம் நல்ல வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது.
அதுதான் மாநில அளவில் பல ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை திட்டம் வகுத்து உருவாக்கி நடத்தியவன் நான் எனவே எனக்கு 234 தொகுதிகள் பற்றிய தகவலும் ஓரளவுக்கு தெரியும்.
இந்த தொகுதியில் வெற்றி பெறுவது கடினமான பணியே தவிர, மிகப்பெரிய கடினமான வேலை இல்லை எனத் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: மற்றொரு கோவை ஆகிறதா மதுரை? வணிக கோணத்தில் திருப்பரங்குன்றம் மறியல்...