ரயில்வே துறையில் அவ்வப்போது காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை ரயில்வே துறை வெளியிடும். தகுதி தேர்வுகளின் அடிப்படையில் பணியிடங்களை நிரப்புவது வழக்கம். அந்த வகையில் தற்போது, நாடு முழுவதும் காலியாக உள்ள 9 ஆயிரத்து 970 உதவி ஓட்டுநர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தெற்கு ரயில்வேயில் 510 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்காக ஏப்ரல் பத்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையை பொருத்தவரை பல்வேறு பிரிவுகளில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 9 ஆயிரத்து 970 உதவி ஓட்டுநர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கன்ஃபார்ம் டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதி: ரயில்வே புது ரூல்ஸ்..!

அதிகபட்சமாக, கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் ஆயிரத்து 461 உதவி ஓட்டுநர் பணி இடங்களும், தென் மத்திய ரயில்வேயில் 989 இடங்களும், மேற்கு ரயில்வேயில் 885 இடங்களும், தென் கிழக்கு ரயில்வேயில் 796 இடங்களும், கிழக்கு ரயில்வேயில் 768 இடங்களும், மேற்கு மத்திய ரயில்வேயில் 759 இடங்களும், கிழக்கு மத்திய ரயில்வேயில் 700 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மேலும், தெற்கு ரயில்வேயில் 510 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களின் கல்வித் தகுதி வரம்புகளை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் ஏப்ரல் 10 தேதி முதல் மே 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி கீழ் பெர்த்தில் பயணம் செய்யலாம்.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு.!