தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்று கடலோர தமிழகத்திலும், உள் தமிழகத்தில் ஒரு இரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என கூறியிருந்தது.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரே ஒரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெற்பயிர்களை அழித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. மனித உரிமை ஆணையம் பரிந்துரை..!
இதனிடையே மார்ச் ஒன்றாம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழை எச்சரிக்கையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார், மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: 3 மாதம் தான் கெடு... அதுக்குள்ள முடிக்கல, அவ்வளவுதான்.. அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்...!