பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் டிசம்பர் 30, 2022 அன்று ஒரு விபத்தில் சிக்கினார். அந்த நேரத்தில் ரஜத் என்ற இளைஞன் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றினார்.ஆனால் இப்போது அதே ரஜத் தனது காதலியுடன் சேர்ந்து விஷம் குடித்தார். இதில் அவரது காதலி விஷம் குடித்து இறந்தார். இப்போது ரஜத் உயிருக்கு போராடி வருகிறார்.
ரஜத், முசாபர்நகரின் ஷகர்பூரில் அமைந்துள்ள மஸ்ரா புச்சா பஸ்தியில் வசிப்பவர். இரண்டு நாட்களுக்கு முன்பு, ரஜத் தங்கள் மகளை ஆசை வார்த்தைகூறி தன்னுடன் அழைத்துச் சென்றதாக அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். பின்னர் அந்தப் பெண்ணிற்கு விஷம் கொடுத்ததாக தாய் கமலேஷ், ரஜத் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் தற்போது ரஜத்தின் நிலை மோசமாகவே உள்ளது.சுயநினைவு திரும்பிய பிறகு போலீசார் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார்கள்.

தகவலின்படி, ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றிய ரஜத், கடந்த ஐந்து ஆண்டுகளாக மனு என்ற 21 வயது பெண்ணுடன் காதல் கொண்டிருந்தார். இந்த உறவை குடும்ப உறுப்பினர்கள் ஏற்கவில்லை. இருவரின் குடும்பத்தினரும் திருமணத்தை மறுத்துவிட்டனர். இருவரின் குடும்பத்தினரும் வேறு இடத்தில் அவர்களின் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, பிப்ரவரி 9 ஆம் தேதி மாலையில் ஒரு வயலில் விஷம் குடித்தனர். அவர்கள் இருவரும் மயங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்ததும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உத்தரகண்டில் உள்ள ஜாப்ரேடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவரது காதலி உயிரிழந்தார்.ரஜத் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: “ஆடையைக் கிழிச்சி அடிச்சாங்க”... விசிக நிர்வாகியை டேமெஜ் செய்ய முயன்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் - பரபரப்பு காரணம்..!

நீல நிற சட்டை அறிந்திருப்பவர் ரஜத்
கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் மெர்சிடிஸ் கார் ஒரு தடுப்புச் சுவரில் மோதியபோது, ரஜத் உதவினார். டிசம்பர் 30, 2022 அன்று ரிஷப் பந்த் காரில் ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் விபத்தில் சிக்கினார். பின்னர் ரஜத், ரிஷப்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த், பல மாத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார்.
ரிஷப் பந்த், ரஜத்துக்கும் தனது உயிரைக் காப்பாற்றிய மற்றொரு உதவியாளருக்கும் ஸ்கூட்டரைப் பரிசாக அளித்து நன்றி தெரிவித்தார். ரிஷப் பந்திடமிருந்து ஒரு ஸ்கூட்டியை பரிசாகப் பெற்ற பிறகு ரஜத் பிரபலமடைந்தார். ஆனால் ரஜத் இப்படி விஷ ஒரு தற்கொலை முடிவை எடுப்பார் என்று யாருக்கும் தெரியாது. இன்று ரஜத் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: அயோத்தி ராமஜன்பூமி தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மரணம்