டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கணக்கில் வராத கட்டுக்கட்டாகப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அளித்த விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிஎஸ். சாந்தாவாலியா, கர்நாடக உயர் நீதிமன் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 14ம் தேதி ஹோலி பண்டிகையன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லாத நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு, அறைகளை உடைத்துப் பார்த்தபோது ஓர் அறையில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக போலீஸாருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் சேர்ந்து ஆலோசனை நடத்தி, 3 பேர் கொண்ட குழுவை அமைத்தனர். இதற்கிடையே டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா, விசாரணை நடத்தி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: பார்வை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்ற தகுதியுள்ளவர்கள்: உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு
உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கும் வகையில் விசாரணை அறி்க்கையையும், வீட்டில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் கிடந்த பணத்தின் வீடியோ காட்சியையும் புகைப்படங்களையும் நீதிமன்ற இணையதளத்தி்ல் வெளியிட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா உள்விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு விவரம், ஆதாரங்கள், விவரங்கள், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் விளக்கம் ஆகியவற்றை அளித்துள்ளார்.
அந்த அறிக்கையில் “ நீதிபதி யஷ்வந்த் வர்மா அளித்தபதில்கள் மற்றும் தீ விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சாட்சியங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்தேன்.
இதில் நான் கண்டறிந்தது என்னவெனில், டெல்லி போலீஸ் ஆணையர் அறிக்கையில் மார்ச் 15ம் தேதி நீதிபதி வர்மா வீட்டில் காவலுக்கு போலீஸார் ஒருவர் இருந்துள்ளார். மார்ச் 15ம் தேதி காலையில் தீவிபத்து நடந்த இடத்தில் எரிந்த நிலையில் பல பொருட்களும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் இருந்தன எனத் தெரிவித்தார்.

நான் விசாரணை நடத்தியதில், நீதிபதி வர்மாவின் வீட்டுக்குள் வெளிநபர்கள் செல்வதற்கோ , அவருடைய அறைக்குள் செல்வதற்கோ சாத்தியம் இல்லை. வீட்டில் தங்கியிருப்பவர்கள், வேலைக்காரர்கள், தோட்டவேலை பார்ப்பவர்கள், பாதுகாவலர்கள் மட்டுமே செல்ல முடியும்.
ஆதலால் இந்த விவகாரத்தில் முழுமையான ஆழ்ந்த தீவிரமான விசாரணை தேவை” எனத் தெரிவித்துள்ளார். நீதிபதி யஷ்வந்த் வர்மா அளித்த பதிலில் “ என் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம், ஆவணங்கள் கைப்பற்றதாக எழுந்த புகார் ஆதாரமற்றது ஏற்கெனவே என் மரியாதையை கெடுத்துவிட்டனர்.
என் மதிப்பை சீர்குலைக்க சதி நடந்துள்ளது. கடந்த 2024 டிசம்பரில் சமூக வலைத்தளத்தில் என்னைப்ப ற்றி அவதூறு பரப்பப்பட்டது, அதைத் தொடர்ந்து இப்போது என் வீ்ட்டில் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டின் உள்அறையில் தீவிபத்து ஏற்படவில்லை, வெளிப்புறத்தில் உள்ள சிறிய வீட்டில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த அறையில் அனைவரும் புழங்குவார்கள், பழைய பொருட்கள் சேமித்து வைத்திருப்பார்கள்.

இந்த அறை என்னுடைய பிராதான வீட்டிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது, எந்த இணைப்பு பாதையும் இல்லை. இது என்னுடைய அறையில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. ஒரு நீதிபதியாக எனது செயல்பாடு குறித்தும், எனது நீதித்துறை பணியை நிறைவேற்றுவதில் எனது நேர்மை, பணிஒழுக்கம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணப் பைகள் முழுமையாக இல்லாதது என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. என் மகள், தனிச் செயலாளர், வீட்டு ஊழியர்களிடம் எரிந்த ரூபாய் நோட்டுப் பைகள் காட்டப்படவில்லை. வீட்டின் ஒரு மூலையில் உள்ள ஒரு சேமிப்பு அறையில் ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டது.
அந்த அறையை பின்புறத் வாயிலில் இருந்து எளிதாக செல்லலாம் என்ற வாதத்தை எவ்வாறு ஏற்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த விசாரணை முடியும் வரை, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்தவிதமான நீதிமன்ற பணியையும் வழங்க வேண்டாம் என்று தலைமை நீதிபதிக்கு உபாத்யாயுவுக்கு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கண்காணிக்கிறது.
இதையும் படிங்க: மதராஸா மாணவர்கள் 25 ஆயிரம் பேர் தவிப்பு: உ.பி. , மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்