சீமான் வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை கிழிக்கச் சொன்னது யார்? சீமான் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறினார்களா? என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் இன்று காலை சீமான் வீட்டிற்கு வருகை தந்து நோட்டீஸ் ஓட்டினர். இந்நிலையில் சீமானின் உதவியாளர் அந்த நோட்டீஸை கிழித்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் காவலர் முன்பு துப்பாக்கியைக் காட்டியதாக சீமானின் காவலாளியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும், அதனால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கியை காட்டி மிரட்டினாரா?
இதுகுறித்து சீமான் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துப்பாக்கியை அவர் உரிமையோட தான் வைத்திருந்தார். லைசென்ஸ் துப்பாக்கியை அவரது தற்காப்புக்காக தான் பயன்படுத்தப்பட்ட வச்சிருந்தாரு. ஏன்னா சமீப காலமா இந்த சீமான் அண்ணன் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுறாங்க, அவர் வீட்டுக்கு வந்து வெடிகுண்டு மிரட்டல் எல்லாம் வந்துட்டு இருக்கு. பெட்ரோல் குண்டு வீசுறதாக பல செய்திகள் வந்துட்டு இருக்கு. இது சம்பந்தமா அவர் ஒரு தற்காப்புக்காக வைத்திருந்த துப்பாக்கி தான் அது.
இதையும் படிங்க: அந்தப் பொம்பளைய இங்கே கூட்டிட்டு வா..! நான் வருகிறேன்… கொந்தளிக்கும் சீமான்..!

அதை பயன்படுத்திவிட்டார் என்று பொய்யா ஒரு வழக்கு பதிவு பண்ணி இருக்காங்க. வளசரவாக்கம் காவல் நிலையத்துல இன்னைக்கு வந்து சீமான் ஆஜராக சொல்லி அழைப்பணை கொடுத்திருந்தாங்க. ஆனா இன்னைக்கு அவரால ஆஜராக முடியாதுன்னு, நாங்க வழக்கறிஞர்கள் எல்லாம் எல்லாரும் சேர்ந்து போய் ஒரு ஒரு கடிதம் கொடுத்துட்டு வந்தோம். இன்னைக்கு ஆஜர் ஆக முடியாதுன்னு அது சம்பந்தமா இன்னைக்கு வந்து அழைப்பானையை அவங்க வீட்லயே வந்து ஒட்டிட்டு போனாங்க.

ஒட்டிட்டு போகும்போது அதை பார்த்துட்டு இருந்த ஒரு தம்பி வந்து அதை கிழிச்சிருக்காப்புல, அதுக்காக போலீஸ் வந்து அத்துமீறி சீமான் வீட்டுக்குள்ள நுழைஞ்சு தாக்க முற்பட்டிருக்காங்க. அங்க இருந்து அவரை வெளியே கூட்டிக்கொண்டு வரும் போது, அவர் தாக்கி முற்பட்டு வெளியில கூட்டிட்டு அவர் இடுப்புல இருந்த துப்பாக்கியை பார்த்த போலீஸ் அதை கைப்பற்றியிருக்காங்க. உண்மையில் அவர் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. அதை வந்து அவரு மிரட்டவும் கிடையாது எனக்கூறினார்.

இப்ப அவங்கள ரெண்டு பேரையும் காவல் நிலையத்துல அழைச்சு வச்சிருக்காங்க. காவல்துறை நோட்டீஸ் ஓட்டிவிட்டு சென்ற பிறகு தான், அதனை கிழித்திருக்கிறார்கள். போலீஸ் முன்னாடி எல்லாம் கிழிக்கவில்லை. அதேபோல் துப்பாக்கியை கைப்பற்றியதற்கான காரணம் குறித்தும் இதுவரை எதுவும் சொல்லவில்லை. அவரை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றும் போது துப்பாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளார். அதனை மிரட்டியதாக போலீசார் சித்தரிக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட இருவரும் யார்?
கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர். “துப்பாக்கி வச்சிருந்தவர் ஒரு எக்ஸ் ஆர்மி மேன். அவரு லைசென்ஸ்டு துப்பாக்கி வச்சிருக்காரு. அவர் பெயர் அமல்ராஜ், சுதாகர் இங்கே ஓட்டுனராக பணியாற்றுகிறார்” என்றார்.

சீமான் மனைவி கூறி சம்மன் கிழிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள வழக்கறிஞர், போலீசாரிடம் ஏற்கனவே சீமான் நாளை தான் விசாரணைக்கு ஆஜராவார் என விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது என சொன்னோம். அதன் பின்னர் தான் சம்மனைக் கிழித்திருக்கிறார்கள். சட்டப்படி சம்மன் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அரசியல் காரணங்களுக்காக சீமான் மீது ஆளுங்கட்சி தேவையற்ற காரணங்களுக்காக காவல்துறையை ஏவிவிடுறாங்க.
இதையும் படிங்க: ஆஜராக முடியாது என்ன செய்வீர்கள்..? சீமான் சவால் விட்ட பின்னணியில் டெல்லி… ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்..!