கடந்த இரண்டு நாட்களாக தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்களும், பாஜகவினரும் வெளிநடப்பு செய்தனர். இதற்கு முன்னதாக அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக பேசப்படுகிறது.

இந்த சூழலில் சபாநாயகரை செங்கோட்டையன் தனியே சந்தித்து பேசியது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. செங்கோட்டையன் உறுப்பினர்கள் செல்லும் பாதையை தவிர்த்து சபாநாயகர் செல்லும் பாதையை தேர்ந்தெடுத்து அவ்வழியாக சென்றதும் கவனிக்க கூடியதாக இருந்தது. நேற்று சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி அளிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: அதிரும் அதிமுக... அடுத்தடுத்து நடந்த சண்டையால் இபிஎஸ் அப்செட்!!
அப்போது செங்கோட்டையன் அமைதியாக இருந்துள்ளார். இது எல்லாம் அதிமுகவில் இரு கோஷ்டி மோதல் வேடிக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக வைக்கப்பட்ட பேனர்களில் அதிமுக தலைவர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இல்லை.

இதை காரணம் காட்டி அந்த நிகழ்வில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதில் இருந்து செங்கோட்டையனுக்கு தனி அணி உருவாக ஆரம்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையை செங்கோட்டையன் எதிர்ப்பதாக கூறப்படுகிறது இந்த சூழலில் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசியுள்ளார். அதில் என்ன பேசினார் என்பது வெளியாகாத பட்சத்தில் அதிமுகவில் செங்கோட்டையன் – எடப்பாடி மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் கசிகிறது.
இதையும் படிங்க: ஆவேசமாக செங்கோட்டையனை நெருங்கிய நிர்வாகி... அடுத்த நொடியே அதிமுக கூட்டத்தில் நடந்த பரபர சம்பவம்..!