சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஐஐடியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி, வளாகத்திற்கு வெளியே உள்ள பேக்கரிக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார்.

அங்கு பணியாற்றி வரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற நபர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞரைக் கைது செய்த கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இதெல்லாம் வெட்கமா இல்லையா? - அரசு மருத்துவமனைக்கு நடந்த அவலத்தால் கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இன்று வரை தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை அன்று, ஐஐடி விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போதை ஆசாமியை கொத்தாக தூக்கிய போலீஸ்!