அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜமீரை ரத்து ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி விஜயகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இன்று அந்த மனு உச்சநீதிற்றத்தில் நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ''இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும்,செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? எனக் கேட்டு விஜயகுமார் என்பவருக்காக அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ''செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் சாட்சிகள் பயப்படுவார்கள் எனவும், குறிப்பாக இந்த வழக்கில் 212 பேர் அரசு ஊழியர்கள் சாட்சியாக இருப்பதால் அவர்கள் அச்சம் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நீதிபதிகள் ஏற்கெனவே அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

எனவே அமைச்சராக தொடர செந்தில் பாலாஜி விரும்புகிறாரா? என அவரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு நீதிபதிகளில் அறிவுறுத்தி இருக்கிறார்கள் எனவும், செந்தில் பாலாஜிக்கு எதிராக உள்ளவர்கள் அரசு ஊழியர்களாக இருப்பவர்களே சாட்சிகளாக இருக்கிறார்கள். ஆகையால், செந்தில் பாலாஜி அமைச்சராக இனியும் தொடர விரும்புகிறாரா? எனக் கேட்டு விளக்கம் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: வெண்ணை மலை முருகன் கோயில் தேரோட்டம்... மக்களோடு மக்களாக தேரை வடம்பிடித்து இழுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி...!
ஒருவேளை செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் எந்தத் தகுதியின் அடிடப்படையில் இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும் நீதிபதிகள் விளக்க வேண்டும். நீதிபதிகளே அதிருப்தியை பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கு விஷயத்தில் உரிய விளக்கம் கேட்டு செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா எனக் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும்.
அமலாக்கத்துறையை பொருத்தவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் முன்பு வரை தடைவிதிக்க கேட்டுக் கொண்டு வந்தது.தற்போது வரை சாட்சிகள் விசாரணைக்கு வரவில்லை என்றும், இது அவர் மீது உண்டான பயத்தை காட்டுவதாகவும், எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யேண்டும். இதுகுறித்து செந்தில் பாலாஜி தரப்பில் உரிய விளக்கம் கேட்டு பதிலை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.அனைத்தையும் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை வரும் மார்ச் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: 'ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வரானவர் எங்களுக்கு வகுப்பெடுக்கலாமா..?' எடப்பாடியாருக்கு செந்தில் பாலாஜி சம்பட்டி அடி..!