முதலமைச்சரின் பரிந்துரைப்படி தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பாக ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம வாரியத்துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி ராஜகண்ணப்பன் பால் வளத்துறையை மட்டும் கவனிப்பார். வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி கிராம தொழில் வாரிய துறையையும் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

முதலமைச்சரின் பரிந்துரைப்படி துறை மாற்றப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை இரு மடங்காக உயர்கிறதா? ஜூன் மாதத்திற்கு மேல் அறிவிப்பு? இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி
தமிழக சட்டப்பேரவையில் விரைவில் வரும் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பட்ஜெட் ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்படும். அந்த வகையில், வரும் நிதியாண்டுக்கு தற்போதைய திமுக அரசு 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், கடந்த 10ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.