பதவி நீக்க உத்தரவை எதிர்த்து தாம்பரம் கவுன்சிலர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27 ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையும் படிங்க: தந்தத்திற்காக கொன்று எரிக்கப்பட்ட யானை.. குற்றவாளியை விரைந்து கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..!
இந்த உத்தரவை எதிர்த்து தாம்பரம் கவுன்சிலர் ஜெயா பிரதீப் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டல குழு தலைவராக இருந்த தனக்கு எதிராக கவுன்சிலர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி பதவி நீக்கம் செய்யப்பட்டுவுள்ளதாகவும், தனது விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயண பிரசாத், மனுவுக்கு பதிலளிக்கும் படி உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: காமெடியன் குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!