தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் கொண்டாட்டம் கலை கட்டியிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமின்றி, "இன்பம் பொங்கும் தமிழ்நாடு" என வாசலில் கோலம் போட அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை அன்பு கட்டளையாக ஏற்றுக் கொண்ட பெண்கள், தங்கள் வீடுகளில் பொங்கல் கோலத்தோடு "இன்பம் பொங்கும் தமிழ்நாடு" என எழுதி இருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு மக்களுக்கு, பெண்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருவதாகவும், அதனால் தாங்கள் இன்பத்துடன் இருப்பதாகவும் தெரிவித்த பெண்கள், "இன்பம் பொங்கும் தமிழ்நாடு" என வாசலில் கோலமிட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோர் கவனத்திற்கு.. சிறப்பு ரயில்கள் தயாரா இருக்குங்க.. பத்திரமா வந்து சேருங்க..

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படுவதன் வாயிலாக, குடும்பச் செலவு செய்ய முடிவதாகவும், வேலைக்கு போகும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தின் வாயிலாக, பயணச்சலவின்றி ஊதியத்தை முழுமையாக சேமிக்க பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும், பொருளாதாரத்தில் நெருக்கடியிலே உள்ள பெண்களுக்கு பெரும் உதவியாக அமைந்திருக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக, வழங்கப்படும் கல்வி உதவி, கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு பெருமளவில் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும், பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் முதல்வர் மு. க. ஸ்டாலின் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் ஏற்படுத்திருப்பதாகவும், பெண்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக கொண்டு வருவதனால், தமிழ்நாடு மக்கள் இன்பத்துடன் இருப்பதாகவும், அதனால் இன்பம் பொங்கும் தமிழ்நாடு என வாசலில் எழுதி இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர் .
இதையும் படிங்க: அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.. திமுக வழியில் விஜய்!