ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது கலாச்சாரம் என போற்றப்பட்டாலும், ஆங்காங்கே இருதார மணம் நடந்து கொண்டு தான் வருகிறது. பெரும்பாலான சீரியல்களில் இரண்டு தாரம் செய்த மணமகனின் கதை இடம் பெறுவதுண்டு. 2 பெண்களை மணப்பது குறித்து கேலியாகவும், வாழ்த்தியும் பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுவதும் உண்டு.
சிலர் இந்து கடவுள்கள் சிலரை குறிப்பிட்டு சுட்டிக்காட்டி, இருதார மணத்திற்கு சப்போர்ட் செய்வதும் உண்டு. எனினும் 2 பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒரே வீட்டில் சம்மதித்து வாழ்வது அரிதிலு அரிது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் அரங்கேறி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டம் கும்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய தேவ். இளம் விவசாயி. அதே கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரிய தேவ் மீது அதே கிராமத்தை சேர்ந்த லால் தேவி, ஜல்க்கர் தேவி ஆகியோருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது காதலை சூர்ய தேவ்-இடம் தெரிவித்துள்ளனர்.
சூரிய தேவிற்கு இரண்டு பேரையும் பிடித்து போய் உள்ளது. இரண்டு பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் குழம்பி உள்ளார். ஒருவரை ஏற்றுக்கொண்டால் மற்றவர் மனம் பாடுபடுமே என வருத்தமும் பட்டுள்ளார் சூர்ய தேவ்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் ஆணவக்கொலை.. பிறந்தநாளில் 17 வயது சிறுவன் மரணம்.. பெண்ணின் தந்தை செய்த கொடூரம்..!

இப்படியெ இவர்கள் முக்கோண காதல் தொடர்ந்துள்ளது. சூரிய தேவ் இரண்டு பெண்களையும் விடமால் காதலித்து வந்துள்ளார். இரண்டு பெண்களும் சூரிய தேவை விட்டுக்கொடுக்காமல் காதலித்து வந்தனர். வெகு விரைவிலேயே இந்த முக்கோண காதல் விவகாரம் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் குடும்பத்தினர் இந்த முக்கோண காதல் கதையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதாவது ஒரு பெண்ணை மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் சூரிய தேவோ, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் வருவது போல ஐ லவ் யூ டூங்க என்றே பிடிவாதம் பிடித்துள்ளார்.

இது ஒத்து வராத விவகாரம் என்று பெற்றோர் அவர்களை கண்டித்தனர். ஆனால் அப்போது தான் அந்த ட்விட்ஸ்ட் நடந்தது. இளம் பெண்கள் இரண்டு பேரும் சூரிய தேவை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசிக்க முடிவு செய்தனர். மூன்று பேரும் மேஜர் என்பதால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலை உருவானது.
இறுதியில் அவர்களுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். அப்போது சூரியதேவ் ஒரே மேடையில் இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் கரம் பிடித்து தாலி கட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

90களில் பிறந்த குழந்தைகளுக்கு திருமணமே நடைபெறவில்லை. பெண் கிடைக்கவில்லை என பலர் ஏங்கியபடி இருக்க, இளம் விவசாயி சூரிய தேவ், தன்னை காதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் கரம் பிடித்திருப்பது 90களின் குழந்தைகளை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. எது எப்படியோ? இல்லற வாழ்வில் இன்பமுற நுழையும் அந்த புதுவித புதுமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். சூர்ய தேவ், லால் தேவி, ஜல்க்கர் தேவி தம்பதிக்கு இனிய திருமண வாழ்த்துகள்.. நல்லா இருங்கப்பா..
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து ட்ரைனிங்.. ஃப்ளைட்டில் வந்து ஏடிஎம் கொள்ளை.. ஹை டெக் கும்பலை கைது செய்த போலீஸ்..!