தமிழ்நாட்டு காவல் துறையில் அதிக அளவில் தற்போது ட்ரோன் கோமரா பயன்படுத்தப்படுகிறது . திருவிழா கூட்டங்கள் , மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ,சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்த உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்கு ட்ரோன் கோமரா பயன்படுத்தப்பட்டுவருகிறது .அந்த வகையில் அரியலூர் பேருந்து நிலையம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணிக்கு முன்பு ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தனர்.அப்பொழுது நொடியில் பறந்து வந்த ட்ரோன் கேமரா ட்ராபிக் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கேப்பில் பட்டு கீழே விழுந்தது.இதில் அவர் கேப் அணிந்து இருந்ததால் அவர் கண்களில் படாமல் அவர் கேப் மேலே பட்டு ட்ரோன் கேமரா கீழே விழுந்தது.இது அந்த பகுதியில் சில நிமிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அரசு விழாக்களில் பறக்கவிடும் ட்ரோன் கேமரா பயன்படுத்துவோர் உரிய பயிற்சி மேற்கொண்டர்களா என்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ட்ரோன் கட்டுப்பாடு மற்றும் ட்ரோன் இயக்குவதில் உள்ள அடிப்படை முறைகள், ட்ரோன் வகைகள், ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் அதன் பராமரிப்பு, அவசர காலத்தில் ட்ரோன் கையாளுதல் மற்றும் அதற்கான அத்தியாவசிய தேவைகள், ட்ரோன் அசெம்பிளிங் மற்றும் செயல்முறை பயிற்சி,
ட்ரோன் கட்டுபாடு மற்றும் சென்சன் அளவுத்திருத்தம், ட்ரோன் மூலம் கண்காணிப்பு, மேப்பிங் ஒருங்கிணைப்பு, ACT மற்றும் ரேடியோ Telephonic Calibration ஆகியவை கற்பிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..