சயீப் அலிகான்கத்தியால் குத்தப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து பாலிவுட் திரை உலக பிரபலங்களுக்கு கொலை மிரட்டல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் போபால் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அலி கானின் முன்னோர்கள் பற்றிய பல சுவாரசிய தகவல்களும் வந்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினருக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. மேலும் சயீப் அலிகானின் தாயார் அன்றைய பாலிவுட் கனவு கன்னியான ஷர்மிளா தாகூர் ஆவார். அவருடைய கணவர் பட்டோடி பிரபலமான அந்தக் கால இந்திய கிரிக்கெட் வீரர்.

அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான 15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் யாருடைய பராமரிப்புக்கு வரும் என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அது பற்றிய விவரங்களை பார்க்கலாம். கடந்த 1947-ல் மத்திய பிரதேசத்தின் போபால் மாகாணத்தின் கடைசி மன்னராக நவாப் ஹமிதுல்லா கான் இருந்தார். அவருக்கு 3 மகள்கள் இருந்தனர். அதில் மூத்த மகள் அபிதா சுல்தான் 1950-ல் (பிரிவினைக்கு பிறகு) பாகிஸ்தான் சென்றுவிட்டார். 2-வது மகள் சஜிதா சுல்தான் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். இவர் நவாப் இப்திகார் அலி கான் பட்டவுடியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் பேரன்தான் பிரபல இந்தி நடிகர் சயீப் அலி கான்.
இதையும் படிங்க: சைஃப் அலிகான் தாக்குதல் சம்பவத்தில் அதிர்ச்சி… புறாவின் எச்சங்களால் சிக்கிய குற்றவாளி ஷரிபுல்..!

ஹமிதுல்லா கான் குடும்பத்துக்கு மத்திய பிரதேசத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றின் இப்போதைய மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சுதந்திரத்துக்குப் பிறகு எதிரி சொத்து சட்டம் (1968) இயற்றப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துக்கு மத்திய அரசு உரிமை கொண்டாட இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டத்தின் கீழ், போபால் மன்னர் ஹமிதுல்லா கானின் அனைத்து சொத்துகளும் மத்திய அரசுக்கு சொந்தம் என மும்பையை தலைமையகமாக கொண்ட எதிரி சொத்து காப்பக அலுவலகம் கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது.

இதை எதிர்த்து சயீப் அலிகான், அவரது தாய் ஷர்மிளா தாகூர், சகோதரிகள் உள்ளிட்ட தாத்தா பட்டவுடி குடும்பத்தினர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். அகமதாபாத் அரண்மனை, நூர்-உஸ்-சபா அரண்மனை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பல சொத்துகள் தங்களுக்கு சொந்தம் என அதில் கூறியிருந்தனர். இதையடுத்து, அந்த சொத்துகளை மத்திய அரசு கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டம், இதனிடையே, எதிரி சொத்துகளுக்கு அதன் உரிமையாளரின் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அவசர சட்டம் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு சஜிதா சுல்தானை (சயீப் பாட்டி) மன்னரின் வாரிசாக அங்கீகரித்தது. இந்நிலையில், 2015-ல் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை விலக்கிக் கொள்வதாக கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் அகர்வால் அறிவித்தார். அதேநேரம் 30 நாட்களுக்குள் சயீப் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுவரை சயீப் குடும்பத்தினர் தீர்ப்பாயத்தை அணுகினார்களா இல்லையா என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியவில்லை. இதனால் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், அந்த சொத்துகளில் குடியிருக்கும் மற்றும் அனுபவித்து வரும் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கலக்கமடைந்துள்ளனர்.
பட்டவுடி குடம்பத்தினர் மேல் முறையீடு செய்யாதபட்சத்தில் இந்த சொத்துகளை கையகப்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடங்கும்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி இன்று நடந்த விசாரணையின் போது "எதிரிகள் சொத்துச் சட்டம் 1968", கடந்த 2017 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார். எதிரி சொத்து சட்டம் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்காக புதிய மேல்முறையீட்டு ஆணையமும் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் நீதிபதி விவேக் அகர்வால் டிசம்பர் 13ஆம் தேதி பிறப்பித்த தனது உத்தரவில் மேல்முறையீட்டு ஆணையத்திடம் பிரதிநிதித்துவத்தை தாக்கல் செய்வதற்கான சட்டபூர்வ தீர்வை பயன்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் அவர் டிசம்பர் 13 முதல் 30 நாட்களுக்குள் இது தொடர்பான பிரதிநிதித்துவம் தாக்கல் செய்யப்பட்டால் மேல்முறையீட்டு அதிகார வரம்பு அம்சத்தை விளம்பரப் படுத்தாமல் அதன் சொந்த தகுதியின் அடிப்படையில் மேல்முறையீட்டை கையாளும் என்றும் உத்தரவில் கூறி இருந்தார்.
இருப்பினும் இதுகுறித்து போபால் மாவட்ட ஆட்சியர் கவுஷலேந்திர விக்ரம் சிங் இரண்டு தினங்களுக்கு முன்பு கூறும்போது, “சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த சொத்துகள் தொடர்பான 72 ஆண்டு கால ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். சம்பந்தப்பட்ட சொத்துகளில் வசிப்பவர்கள் வாடகைதாரர்களாக கருதப்படுவார்கள்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "உயர்நீதிமன்ற உத்தரவை நான் பார்க்கவில்லை அது தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற்ற பிறகு கருத்து தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அலிகான் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அவர்கள் அதிகாரிகளை அணுகலாம் மேலும் சமீபத்திய தேவைகள் உட்பட பல்வேறு தேவைகளை காரணம் காட்டி நீட்டிப்பும் கோரலாம் என்று வழக்கறிஞர் சவானி கூறினார்.
இந்த குழப்பம் நிலவும் வரை சொத்துக்களை உரிமையாளர்களாகவும் குத்தகைதாரர்களாகவும் ஆக்கிரமித்து உள்ள மக்களின் கதி இருண்ட நிலையில் தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நூர் ரோஸ் சபா அரண்மனை, தார் உஸ்ஸலாம் கவிபியின் பங்களா, அகமதாபாத் அரண்மனை மற்றும் கொடி பணியாளர் இல்லம் ஆகியவை சகிபாலிகான் மற்றும் அவருடைய குடும்பத்தினரால் பெறப்பட்ட சொத்துக்களில் அடங்கும்.
இதையும் படிங்க: 15 நகரங்கள்... 35 தனிப்படைகள்... சைஃப் அலி கானை தாக்கிய முகமது ஷெரீப் சிக்கியது எப்படி..?