தவெக தொடங்கியதிலிருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லை. விஜய் மாநாட்டில் பேசிய பின் கூட்டணி, ஆட்சியில் பங்கு அதிகார பகிர்வு திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. விஜய் பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் கட்சி மின்னல் வேகத்தில் செல்லும் என எதிர்பார்த்த நேரத்தில், ஆமை வேகத்தில் கூட நகராமல் போனது.

ஒரு கட்சி ஆரம்பித்தால் தினசரி அதன் நடவடிக்கைகள் பொதுமக்களுடன், ஊடகங்களுடன் ஏதோ ஒரு வகையில் கனெக்ட் ஆகும். ஆனால் இரும்புக்கோட்டைக்குள் அடைத்து வைத்த புதையல் போல் இரண்டு பேர் பூதங்களாய் அடைக்காத்துக்கொண்டு கட்சியை அங்கே இங்கே நகர விடாமல் செய்து வருவதைத்தான் பார்த்து வருகிறோம்.
இதையும் படிங்க: பேசுறான் சின்ன பையன்... நீ யார்ரா..?? விஜயை ஏளனமாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
ஒரு கட்சி ஆரம்பித்தால் அதுவும் விஜய் போன்ற பிரபலங்கள் ஆரம்பிக்கும் கட்சிக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். மாற்றுக்கட்சியில் புறக்கணிக்கப்பட்டோர் அதிருப்தியில் இருப்போர் புதிய கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் தவெகவில் அப்படி இணைத்துக்கொள்ள வருபவர்களுக்கு எவ்வித வசதிகளும் இல்லை.

கூடுதலாக விஜய்யை சந்திக்கவும் வாய்ப்பில்லாமல் பதிலும் கிடைக்கமல் தவித்து வருகின்றனர். வெறுமனே ரசிகர்கள் மட்டுமே கட்சி அல்ல வெளியிலிருந்து வருபவர்களின் அனுபவமும் கட்சிக்கு பலம். ஆனால் விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் அதற்கு இடமே கொடுப்பதில்லை. விஜய்யை சந்தித்த நபர்களின் தகவலையும் சம்பந்தப்பட்ட கட்சித்தலைமைக்கு தெரிய வந்ததை அடுத்து சிலர் சிக்கலிலும் சிக்கியுள்ளனர்.
இதனால் அந்த பிரமுகர்களில் ஒருவர் விஜய்யிடம் இதுகுறித்து நியாயம் கேட்க விஜய்க்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இப்படி அனுப்பப்பட்ட கடிதத்தை விஜய் கைக்கு நேரடியாக படித்துவிட்டதாகவும் அதுகுறித்து முடிவெடுக்கிறேன், அதுவரை பொறுமையாக இருங்கள் என விஜய் மூலம் அந்த பிரமுகருக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டதாகவும் விஜய் தரப்பிலிருந்து தகவல்.

அதேபோல் அந்த முக்கிய பெண் பிரமுகர் விஜய்யை நேரடியாக சந்தித்து பேசி சென்ற தகவல் பெண் பிரமுகர் இருக்கும் கட்சி தலைவருக்கு செல்ல அவர் கூப்பிட்டு கண்டித்ததால் ஒரு ரகசியத்தைக்கூட காக்க தெரியவில்லையே என குமுறிய பெண் பிரமுகர் அதிமுகவுக்கு போக இருந்தாராம். அதுபற்றியும் அறிந்த விஜய், ”அவர்களை அங்கு போக வேண்டாம்னு சொல்லுங்க நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று உறுதி அளித்ததன் பேரில் முடிவை தள்ளி வைத்துள்ளாராம் அவர்.
விஜய்யின் காதுகளுக்கு இன்னும் பல தகவல்கள் செல்லவில்லை சென்றால் அது எந்த அளவுக்கு பூகம்பமாய் வெடிக்கும் என்பது தெரியாது.
இதையும் படிங்க: விஜய் சொன்னது போலவே நடந்துடுச்சு... கார்த்தி சிதம்பரம் விமர்சனத்தை தொடங்கி வைச்சுட்டாரு!