திருமலா திருப்பதி தேவஸ்தானம் உலக பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் பக்தர்கள் நாடி வரும் திருத்தலமான வெங்கடேஸ்வரா கோயிலை தனித்துவ அறக்கட்டளையான திருப்பதி திருமலா தேவஸ்தானம் (TTD) நிர்வாகித்து வருகிறது. இது இந்தியாவில் மிகப்பெரிய தேவஸ்தானத்தில் ஒன்று. 1932 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருப்பதி திருமலா அறக்கட்டளை அமைப்பின் மொத்த நிகர மதிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டில் ரூ. 3,000,000,000,000 (35 பில்லியன் டாலர்) ( 3 லட்சம் கோடி ரூபாய் ) ஆகும், இது உலகின் பணக்கார இந்து கோவில் அறக்கட்டளையாக உள்ளது.

இது ஆந்திரப் பிரதேச அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு சுதந்திரமான அரசாங்க அறக்கட்டளை ஆகும் . இந்த அறக்கட்டளை உலகில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவியும் திருமலை வெங்கடேஸ்வரா கோயிலை நிர்வாகிக்கிறது . இது தவிர சமூக சேவை, கல்வி, மருத்துவ சேவைகளையும் இந்த அறக்கட்டளை நிர்வாகிக்கிறது. இதன் தலைமையகம் திருப்பதியில் உள்ளது. இதில் 16000 பேர் பணிபுரிகின்றனர்.
திருமலை-திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு பேருந்து சேவை, உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை திருமலா திருப்பதி அறக்கட்டளை வழங்குகிறது. கோயில் நிர்வாகத்தை பராமரித்து டிக்கெட் வழங்குவது, முடி காணிக்கை பராமரிப்பு, லட்டு உள்ளிட்டவைகளையும் பார்த்துக்கொள்கிறது.

திருப்பதி லட்டு மூலம் மட்டும் வருவாய் 15 மில்லியன் டாலரை தாண்டுகிறது. கோயில் நுழைவுச்சீட்டு வருமானம் ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர்கள் வரை தாண்டுவதாக கணக்கு கூறுகிறது. அதேபோல் காணிக்கை முடி ஏலம் மூலம் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கிடைப்பதாக தகவல். மாதந்தோறும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையே 15 முதல் 20 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாக தகவல்.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனம் மிக முக்கியமான நிகழ்வாகும் . லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிவார்கள். 10 நாட்கள் நடக்கும் தரிசனத்துக்காக ரூ.300 செலவில் விற்பனை செய்யப்படுகிறது அதே நேரம் பக்தர்களுக்கு இலவச டோக்கன் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் விநியோகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: புயலாய் புறப்பட்ட 'இளந்தென்றல்'... மன்னராட்சிக்கு மகுடம் சூட அழைக்கும் உடன் பிறப்புகள்..! 'உதித்தது' இன்பநிதி மன்றம்..!

அப்படி ஒரு நிகழ்வில் ஜன 9 ஆம் தேதி அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் வழங்கப்பட்ட ஜன.9 காலை 5 மணிக்கு முன்னரே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வு குறித்து பிரதமர் முதல் இந்தியாவின் அனைத்து முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு முற்றிலும் தேவஸ்தானத்தின் அலட்சியமான நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.

விபத்துக்குப்பின் அங்கு பார்வையிட்ட துணை முதல்வர் பவன் கல்யாணின் வார்த்தைகள் அதை உண்மையென உணர்த்தியது. “சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை. திருமலை திருப்பதி வேவஸ்தானம் அதன் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகு முறையை கைவிட்டுவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகோளாக விடுக்கிறேன்.” என்றார் பவன் கல்யாண்.

இதுவல்லாமல் கடந்த ஜன 13 ஆம் தேதி திருப்பதி லட்டு விநியோக மையத்தில் திடீரென தீ விபத்து ஏறபட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுவும் பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு விஷயத்தில் நடந்த அலட்சியத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. உடனடியாக களத்தில் இறங்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

விபத்து குறித்து விசாரணை நடத்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூடுதல் செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிண்டாலை ஆந்திராவிற்கு அனுப்பி வைத்துள்ளது உள்துறை அமைச்சகம். அவர் 20 ஜனவரி அன்று திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் விசாரணை நடத்த உள்ளார். சுதந்திர அமைப்பான திருமலா திருப்பதி அறக்கட்டளை விவகாரத்தில் முதல் முறையாக மத்திய அரசு நுழைந்துள்ள நிகழ்வாக இது அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தேசிய இயக்குனர் வி.ஆர்.கவாய், திருமலா திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடுவுக்கு எழுதியிள்ள கடிதத்தில், ”கடந்த ஜன.8 ஆம் தேதி கோயில் பிரகாரத்தில் நடந்த நெரிசலில் 6 பேர் உயிரிழந்த விவகாரத்திலும், ஜன 13 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தையும் அடுத்து பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில் ஜனத்திறலை கட்டுப்படுத்தும் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் துணை செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிண்டாl திருமலா திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு நடத்த உள்ளார்”. என கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க 19 ஜனவரி இரவு ஜிண்டால் சென்னை வந்தார். இரவு 8 மணிக்கு ரயில் மூலம் திருப்பதி சென்றார்.
இதையும் படிங்க: தனக்குத் தானே பிரசவம்; பீரோவுக்கு அடியில் மறைக்கப்பட்ட சடலம்; தாய், சேய்க்கு நேர்ந்த கொடூரம்!