2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சற்று நேரத்தில் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிவங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ7 கோடி நிதி ஒதுக்கப்படும். தமிழ் மொழியின் சிறப்புக்காக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, பெங்களூரில் புத்த கண்காட்சி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் நடப்பாண்டு முதல் தமிழ் புத்த கண்காட்சி நடத்தப்படும். இதற்கு ரூ 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விறு விறுப்பான தமிழ்நாடு... காலையில் பட்ஜெட் மாலையில் திமுக எம்.எல்.ஏ. கூட்டம்!!
நூல்களைப் பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓலைச்சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பிக்க ரூ10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட உள்ளது; இந்த திட்டத்துக்கு 1.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஒவ்வொரு ஆண்டும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை பரப்பிட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் என்றும் இதற்காக ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்
இதையும் படிங்க: சூப்பர் மக்களே - 936 இடங்களில் பட்ஜெட் தாக்கலை நேரடியாக பார்க்கலாம்!!