தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தொண்டர்கள் போலி பாஸ் உடன் உள்ளே நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகில் இருக்கக்கூடிய தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. சுமார் 3000 பேர் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று இருக்கிறார்கள். நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்க இருந்தாலும் தொண்டர்கள் அதிகாலை 5 மணியில் இருந்தே வரிசை கட்டி நிற்கத் தொடங்கியுள்ளனர். சுமார் 6.30 மணி அளவில் பவுன்சர்கள் தொண்டர்களுடைய பாஸ்களை சரி பார்த்து உள்ளே அனுமதித்துள்ளனர்.

பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என கறாராக விஜய் தரப்பில் இருந்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கட்டளை சென்றுள்ளது. அதேபோல் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் விஜயைப் பார்த்துக் கொள்ளலாம், கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள், இதுவரை விஜயை நேரில் பார்க்காதவர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் இதை யாருமே கேட்டதாக தெரியவில்லை.
இதையும் படிங்க: 40 சீட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆக வரவில்லை... ஆட்சியை பிடிக்க வந்துள்ளோம்... ஆதவ் அர்ஜுன் விலாசல்

தமிழக வெற்றிக் கழக மாநாடு விளைநிலத்தில் நடைபெற்றதால் லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் விஜயைக் காண வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா வெறும் 3000 பேர் மட்டுமே அமரக்கூடிய நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க பாஸ் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், அதிருப்தி அடைந்த தொண்டர்கள் சிலர் போலி பாஸ் உடன் உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.

தவெக தலைவர் விஜயை எப்படியாவது பார்த்துவிட வேண்டும், அவருடைய உரையைக் கேட்டுவிட வேண்டும் என்பதற்காக ஏற்கனவே பாஸ் வைத்துள்ளவர்களிடம் இருந்து அதனை வாங்கி கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளனர். இதனை பவுன்சர்களிடம் கொடுக்க முயன்ற போது அவர்கள் அதனை போலி என்று கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில் ஏற்கனவே அரங்கத்திற்குள் 2500 பேர் மட்டுமே அமர இடம் உள்ளது. அதற்கு மேல் 500 பேர் கிடைக்கும் இடங்களில் நின்றுகொண்டே நிகழ்ச்சியை கண்டு வருகின்றனர்.
போலி பாஸ், கலர் ஜெராக்ஸ் எல்லாம் எடுத்து வந்துருக்கானுங்க.
ஆமா ப்ரோ ஊழலை எங்க இருந்து ப்ரோ ஒழிக்க போறீங்க? 😂😂😂😂#TVKFirstAnniversary #தற்குறி_விஜய்_கழகம் pic.twitter.com/sCuRC33XlF
— ஒன்றிய எலி 🐀🐀 (@Union_Eli) February 26, 2025
இதனால் போலி பாஸ் கொண்டு வரப்பட்டது எளிதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் QR code உடன் பாஸ் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை கலர் ஜெராக்ஸ் எடுத்து தவெக தொண்டர்கள் கொத்தாக மாட்டியுள்ளனர். உள்ளே இருப்பவர்களுக்கே இடமில்லாத நிலையில், போலி பாஸ் உடன் நுழைய முயன்றவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் அவர்களுடன் தவெக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சோசியல் மீடியாக்களில் இந்த போலி பாஸ் விஷயம் தீயாய் பரவியதை அடுத்து தவெக தலைவர் விஜயைக் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உங்களுடைய தொண்டர்கள் சாதாரண பாஸ் விஷயத்திலேயே இப்படியெல்லாம் நூதன மோசடி செய்கிறார்கள். நீங்கள் நாளைக்கு ஆட்சி வந்தால் எப்படி ஊழலைத் தடுப்பீங்க என வசைபாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பாசிசத்துக்கும்-பாயாசத்திற்கும் சண்டை..' இட்ஸ் வெரி ராங் ப்ரோ… திமுக- பாஜகவை வெளுத்தெடுத்த விஜய்..!