கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். “திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஓர் அரசியல் இயக்கம் ஆகும். அக்கட்சிக்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற தேவை எதுவும் இல்லை. அந்தளவுக்கு திமுக பலவீனமாகவும் இல்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் திமுகவை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதை திமுகவே எதிர்கொள்ளும். ஆனால், திமுகவும் விசிகவும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால், அதை வேடிக்கை பார்க்க முடியாது.

என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசைகாட்டினார்கள். என்னை அசைத்து பார்த்தார்கள். ஆனால், அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் விசிக இல்லை. வளைந்துக்கொடுப்பதால் முறித்து விடமுடியும் என நினைத்தார்கள். ஆனால், வளைந்து கொடுப்பது எல்லாம் முறிந்து விடாது என்பதை புரிந்துக்கொண்டார்கள். திருமாவளவன் நிறைய நெகிவானவன், ஆனால் அதிக பலமானவன் (மோர் பிளக்சபில்: பட் மோர் ஸ்ட்ராங்’). என்னை யாரும் முறித்து, உடைத்துவிட முடியாது.
என்னை ஒரு துருப்பு சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தோற்று போய்விட்டனர்." என்று திருமாவளவன் பேசினார்.
இதையும் படிங்க: பாஜக தயவுக்காக மக்களிடமிருந்து விலகி நிற்கும் அதிமுக.. அதிமுகவை எகிறி அடிக்கும் திருமாவளவன்