போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 973 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாகவும் முடுக்கி விடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேப்பாற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: கலெக்டர் ஆபிஸ் அருகே கஞ்சா விற்பனை..? வடமாநில தொழிலாளர்கள் துணிகரம்.. கட்டிட தொழிலாளி 3 பேர் கைது..!

அந்த வாகனங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு சிலர் அபராதத்தோடு தங்கள் வாகனங்களை மீட்டு சென்றனர். வாகனங்களை பெற முன் வராதவர்களின் வாகனங்கள் மற்றும் உரிமை கோரப்படாத 953 இருசக்கர வாகனங்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், ஒன்பது நான்கு சக்கர வாகனங்கள் என 973 வாகனங்களை ஏலம் விட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த வாகனங்கள் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்திற்கான முன்பதிவு வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என்றும் அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவின் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் ஏலம் நடைபெறும் என்று விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை மறுநாள் செலுத்த வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அழிந்து வரும் அண்ணாச்சி கடை..! 5 ஆண்டுகளில் சிறுமளிகைக் கடைகள் 20% அழிந்தன..!