விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனக் கூட்டம் எம்.ஆர்.வி.நினைவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில துணைத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு பின்னர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் நீண்ட கால கோரிக்கை அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதாகும்.
விற்பனை அடிப்படையில் கடைகளின் ஊழியர்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில் பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டும், கடைகளில் தவறு ஏற்பட்டது நிரூபிக்கப்பட்டால் கடையின் நிர்வாகத்தை கவனிக்க தவறிய மேலாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

தொடர்ந்து பேசிய அவர், பிற அரசு ஊழியர்களைப் போல ஓய்வு பெறும் வயதை 60 ஆக மாற்ற வேண்டும், வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் எங்களது கோரிக்கைகளை அறிவிக்க வலியுறுத்துகிறோம் என்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லண்டனை அதிரவிட்ட தமிழன் இளையராஜா..! அரங்கேறியது ‘வேலியன்ட்’ சிம்ஃபோனி