தவெக தலைவர் விஜய், நேற்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நடந்து கொண்ட விதம்,அந்த விழாவை அரசியல் பேசும் இடமாக மாற்றாதது என பல விஷயங்களில் இஸ்லாமிய சமூகத்தின் மனதில் இடம்பிடித்து விட்டார் என்கிறார்கள் பலரும். இதனால், மொத்தமாக இஸ்லாமிய வாக்குகளை அள்ளிக் குவித்து வந்த திமுகவின் இஸ்லாமியர் வாக்குகள் கொஞ்சம் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றோ, இன்றோ ஆரம்பித்தது அல்ல... கிட்ட தட்ட 10 ஆண்டுகளாக தொடந்து இஸ்லாமியர்களின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் விஜய்.

''2026-ல் இஸ்லாமியர்களின் ஓட்டு விஜய்க்குத்தான்... தரையில் அமர்ந்து நோன்புதிறந்த ஒரே அரசியல்தலைவன் விஜய். இஸ்லாமியர்கள் இதயத்தில் சிம்மாசனம் போட்ட விஜய்'' என பல இஸ்லாமிய இளைஞர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு... கே.என்.நேரு பதிலடி..!
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், முஸ்லீம்களின் வாக்குகளை குறி வைக்கும் வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவிகிதம் இஸ்லாமியர்களாக உள்ளனர். திமுகவின் வெற்றிக்கு இவர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினரும் திமுகவுக்கே வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்தின் அதே ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார் தவெகவின் விஜய். ஆளுங்கட்சியை எதிர்த்து தீவிரமாக செய்லபடுவதன் மூலம் வாக்குகளை பெற முடியும் என விஜய் நம்புகிறார். ஒரு படி மேலே சென்று, திமுகவின் பலமான வாக்குவங்கியாக கருதப்படும் இஸ்லாமியர்களை குறிவைத்து விஜய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதுகுறித்து இஸ்லாமிய பிரமுகர் ஒருவர் கூறுகையில், ''திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்களில் திமுக இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகிறது. இந்த நிலையில் விஜய் கட்சியில் துணை தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இஸ்லாமியர்களை அமர்த்தி இருக்கிறார். குறிப்பாக மாநில மாநாட்டிலேயே ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை மேடையில் அமர வைத்தது இது தான் முதல் முறை. சமூக நீதி கட்சி, சிறுபான்மையினருக்கான கட்சி என சொல்லும் திமுக கூட இதுவரை அவ்வாறு செய்ததில்லை.

பாபு என்ற இஸ்லாமியரை மாவட்ட செயலாளராகவும், ஜாஸ்மின் என்ற இஸ்லாமிய இளம் பெண்ணை மாநில பொறுப்பிலும் நியமித்திருக்கிறார். ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நடத்தும் நோன்பு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் எங்களுக்கு மேலும் நம்பிக்கை வந்திருக்கிறது. கட்சியின் முதல் மாநாட்டிலேயே கொள்கை ரீதியாக பாஜக எதிரி என சொல்லி இருப்பதன் மூலம் அவர் நம்பகமானவராகத் தெரிகிறார். அதன் காரணமாகவே இஸ்லாமிய மக்கள் விஜய்க்கு வாக்களிக்க விரும்புகின்றனர்'' என்கிறார்.

மறுபுறம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது வரும் தேர்தலில் விஜய்க்கு எந்த அளவுக்கு உதவும் என தெரியவில்லை.ஆனால், இஸ்லாமியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஒன்று முதல் கூட்டணியாக தவெகவில் இணைந்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி, பலமான வாக்குவங்கியை கொண்டிருக்கவில்லை என்றாலும் இஸ்லாமியர்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்ய அக்கட்சியின் ஆதரவு உதவும் என கூறப்படுகிறது. திராவிட கட்சிகளின் கோட்டையாக உள்ள தமிழ்நாட்டை கைப்பற்ற பல அரசியல் கட்சிகள், பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக, தங்களின் ரசிகர்களை நம்பி அரசியலில் நுழையும் நடிகர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

திமுக, அதிமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி அரசியலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றது. தற்போது விஜய் திமுகவையும், பாஜகவையும் ஒரு சேர எதிர்ப்பதால் அதிருப்தி வாக்குகளை மட்டுமின்றி இஸ்லாமியர் வாக்குகளை கணிசமாக பெறுவார். திமுகவுக்கு வாக்களித்த கிறிஸ்தவர்களின் விருப்பமும் விஜய்க்கே கிடைக்கும்.
ஆக, மொத்தத்தில் இஸ்லாமியர்களின் ஓட்டில் மட்டுமல்ல, திமுகவுக்கு கிடைத்து வந்த கிறிஸ்தவர்களின் வாக்குகளிலும் ஓட்டையை போட்டுள்ளார் விஜய். இதனால் திமுக தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்றே கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கட்சி கொடியும் இல்ல, கட்சி பேரும் இல்ல, அரசியலும் பேசல... இஃப்தாரில் விஜய்யை கவனிச்சீங்களா?