சேலத்தில் பாமக கௌரவ தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி இல்ல திருமண வரவேற்பு விழாவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்க உள்ளார்.
ஜி.கே.மணியின் மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக், மணமகள் விமலாம்பிகை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சேலம் மெய்யனூர் சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ வரலக்ஷ்மி மஹாலில் இன்று நடைபெற்று வருகிறது. நாளை காலை 9 மணிக்கு திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சேலம் வந்துள்ளார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜேசன் சஞ்சய், சற்று நேரத்திற்கு முன்பு சேலம் சென்றடைந்துள்ளார். நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறிய பிறகு அவரது குடும்பத்தில் நிறைய சர்ச்சரவுகள் நிகழ்ந்ததாக கூறப்பட்டன. மனைவியுடன் விவகாரத்து, மகனுடன் விஜய் பேசுவது கிடையாது போன்ற வதந்திகள் அடிக்கடி வெளியாகி வந்தன.
இதையும் படிங்க: இந்த ஐடியா நமக்குத் தோணலயே... திமுக, அதிமுகவை திகைக்க வைத்த தவெக... விஜய் விடுத்த அழைப்பு...!
இந்நிலையில் அரசியல்வாதி ஒருவரது இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜேசன் சஞ்சய் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜி.கே.மணி முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் நேரில் சென்று அழைப்பு கொடுத்திருந்தார். அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கும் அழைப்பு வழங்கப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இருப்பதால் தனக்குப் பதிலாக மகன் சஞ்சயை விஜய் அனுப்பி வைத்திருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் படித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஜி.கே.மணி இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியும் ஜேசன் சஞ்சய் உடன் சென்றிருக்கிறார்.

ஆனால் மற்றொருபுறம் இது அரசியல் காரணத்திற்கான சந்திப்பு இல்ல, இயக்குநர் என்ற முறையில் ஜேசன் சஞ்சய் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆம், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் படித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் ஜி.கே.எம். தமிழ்குமரன் பணியாற்றி வருகிறார். இவர் ஜி.கே.மணியின் மகன் ஆவார். இவரது அழைப்பின் பேரில் தான் இந்த திருமண நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் பங்கேற்றிருப்பதாகவும் கூறப்படுகிறஹ்டு. இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஜி.கே.மணி இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியும் ஜேசன் சஞ்சய் உடன் சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: 'ஸ்டார் ஹோட்டல்' ரகசியம்... விஜய் போட்ட உத்தரவு... பரபரப்பாகும் தவெக முகாம்..!