வக்ஃபு வாரிய திருத்த மசோதா தற்போது உள்ள வடிவத்தில் இருந்தால் சமூகத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும், முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்படும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி இன்று பேசியதாவது:
வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிராகரிக்கும், முஸ்லம் சமூகத்துக்கே எதிரானது. இந்த திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், தேசத்தை 1980களில், 1990களின் தொடக்கத்துக்கு பின்னோக்கி கொண்டு செல்லும்.
நான் எச்சரிக்கையாக மத்தியில் ஆளும் பாஜக அரசை எச்சரிக்கிறேன். நீங்கள் இந்த திருத்த மசோதாவை இப்போதுள்ள வடிவத்தில் கொண்டுவந்தால், இது அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகள் 25,26, 14 ஆகியவற்றை மீறுவதாகும். சமூகத்தில் நிலையற்ற தன்மையை ஏ ற்படுத்தி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இந்த மசோதாவை நிராகரிப்பார்கள். எந்த வக்ஃபு வாரியச் சொத்துக்களும் இருக்காது, ஒன்றுமே இருக்காது.

நீங்கள் இந்தியாவை 'விக்சித் பாரத்' வளர்ந்த இந்தியாவாக்க ஆக்க விரும்புகிறீர்கள், எங்களுக்கு 'விக்சித் பாரத்' வளர்ந்த இந்தியா வேண்டும். இந்த தேசத்தை 1980களுக்கும், 1990களின் தொடக்கத்துக்கும் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள். இது உங்களின் பொறுப்பு. பெருமைக்குரிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், நான் ஒருபோதும், என்னுடைய மஸ்ஜித்தை(மசூதி) இழக்கமாட்டேன். என்னுடைய தர்ஹாவில் ஒரு இன்ஞ்சை கூட இழக்கமாட்டேன். அதற்கு அனுமதிக்கவும்மாட்டேன்.
நாங்கள் இனி இங்கு வந்து உயர்மட்ட அளவில் பேச்சுநடத்தமாட்டோம். இது நான் நேர்மையாக நின்று பேச வேண்டிய சபை, என் சமூகமும் - நாங்களும் பெருமைமிக்க இந்தியர்கள். இது என்னுடைய சொத்து, யாராலும் கொடுக்கப்படவில்லை. அதை என்னிடமிருந்து நீங்கள் பறிக்க முடியாது. வக்ஃப் எனக்கு ஒரு வழிபாட்டு முறை.” இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 16 மசோதாக்கள் ! பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்பு திருத்த மசோதாவையும் தாக்கல் செய்ய திட்டம்