நடிகை விஜயலட்சுமி தாக்கல் வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த தடை உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீமான், ''நாம் தடைதான் கேட்டிருந்தோம். அதற்குப் பிறகு அந்த வழக்கை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்திலும் அதே கோரிக்கைதான் வைத்தோம். இது ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு. எல்லாருக்குமே தெரியும். ஆகையால் நானே தான் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்தேன்.

ஏனென்றால் இந்த விவகாரம் 14, 15 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே செல்கிறது. ஆகையால்தான் நானே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். எப்படிப்பார்த்தாலும் இந்த வழக்கை விசாரித்தால் முழுக்க பொய் அவதூறு என்று தான் வந்து முடியும். என் மீது சுமத்தப்பட்ட பலி. ஆகையால் தான் உயர் நீதிமன்றம் சென்றோம். இந்த இடைக்கால தடையை நான் வரவேற்கிறேன். மேலும் சட்டப்படி எப்படி நகர வேண்டுமோ அதை செய்வோம். உச்சநீதிமன்றம் கூறவது போல அந்த நடிகையிடம் உடன்பாடு எல்லாம் செய்து கொள்ள முடியாது. அதற்கு தேவையும் இல்லை.
இதையும் படிங்க: சீமானுக்கு பெரிய ரிலீஃப்..! இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.. விரிவான தகவல்கள்
என்னைப்பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். பெரியாரியம் என்பதே இவ்வளவுதான். ஏன் நாம் பெரியாரியத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் என்றால், பெரியாருடைய கோட்பாடுகள் தவறானவை. சித்தாந்தங்கள் தவறானவை. எவ்வளவு அநாகரிகமாக இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். பெரியாருடைய கோட்பாடு ''திருமணமே செய்து கொள்ளாதே...'' என்பதுதான்.. நான் இதைச் சொல்லவில்லை. ஐயா வீரமணியே அதைச் சொல்லி இருக்கிறார்.

பாசம் காட்ட இரண்டு பிள்ளை வேண்டும் என்றால் அதற்காக யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? தேவை என்றால் யாரிடமாவது போகட்டும். அதற்காக ஒரு சுமையை சுமந்து கொண்டே இருக்க வேண்டுமா? என்று திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் தான் சொல்கிறார்கள். திருமண உறவே இருக்க கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், அதே அவர்கள் என் விவகாரத்தில் மட்டும் 'ஏமாற்றிவிட்டு எப்படி போகலாம்..?' என்று கேள்வியை கேட்கிறார்கள்.

அவர்கள் கற்பு என்றே ஒன்று இல்லை என்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. நான் அவருடைய கற்பை அழித்து விட்டதாக கூறுகிறீர்கள். எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது பாருங்கள்... என்ஜாய்மெண்ட் வித்அவுட் ரெஸ்பான்ஸிபிலிட்டி' என்றார் பெரியார். ஆனால், என் விஷயத்தில் ரெஸ்பான்ஸ் இருக்க வேண்டும் என்கிறீர்கள். இதற்காக சுவரொட்டி ஒட்டிக்கொண்டு எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள். அதைத்தான் நான் எதிர்க்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் வரை சென்ற பஞ்சாயத்து...சூடு பிடிக்கும் சீமான் பாலியல் வழக்கு!!