ஒரு விரல் புரட்சி போல தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன் கைப்பட எழுதியுள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது . அண்ணா பல்கலைக்கழத்தில் பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை நாட்டை உலுக்கியுள்ள நிலையில் , அன்புத் தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகியிருக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கனை உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு பெண்கள் ஆதரவு எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும் தற்போது இந்த கடிதம் மேலும் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: சீமான் தம்பிகளை சில்லறைகளாக்கிய தவெக... பட்டுவேட்டி கனவில் பறிபோன கோவணம்..!
இதையும் படிங்க: பாஜகவின் விசிக கரிசனம்... அடியெடுத்து வைக்கிற இடமெல்லாம் கேட் போடும் தலைவர்கள்..? கருவேப்பிலையான ஆதவ் அர்ஜூனா..!