2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே தீர வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார். இதனை இறுதி செய்து இன்று ஒரே மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்களை அமித் ஷா அறிவிக்க இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்று அமித்ஷாவுடனான கூட்டம் நடைபெற இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மேடையில் ஏழு இருக்கைகள் போடப்பட்டிருந்ததால் இடம்பெறப்போகும் தலைவர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆனால் தற்பொழுது அது வெறும் பாஜகவின் செய்தியாளர்கள் சந்திப்பாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அதிமுக சார்பில் அமித் ஷாவிற்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உஷாரான அமித் ஷா... 4 மணி நேரம் முன்னாடியே முக்கிய நபருடன் சந்திப்பு - காரணம் என்ன?

அதாவது கூட்டணி என்று வரும் போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை எந்த கணக்கில் வைப்பது என்ற குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம். அதனால் தான் இந்த பேச்சுவார்த்தைக்கு அவர் ஆரம்பத்தில் இருந்தே பிடிகொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. மற்றொருபுறம் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நீடித்து வரும் இபிஎஸ் பாராமுகம் காட்ட காரணமாக அமைந்துள்ளது.

விகே சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு இந்த கூட்டணிக்குள் என்ன மாதிரியான ரோல் இருக்கும், இவர்களுடன் ஒத்துப்போக எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் ஆர்வம் காட்டாததோடு, ஓபிஎஸ் உடன் சேரவே மாட்டேன் என ஓபன் அறிவிப்பு விட்டது பாஜகவிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதனால் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்கவே ஆடிட்டர் குருமூர்த்தியை அமித் ஷா சந்தித்ததாகக்கூறப்படுகிறது. ஏனெனில் 2017ம் ஆண்டு முதலே அதிமுக - பாஜக கூட்டணி விவகாரங்கள் மற்றும் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறார். எனவே இந்த விவகாரத்தில் அவருடைய கருத்தையும் அமித் ஷா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக அரசியலை புரட்டிப்போடப் போகும் அமித் ஷா... இன்று இரவு மீட்டிங்; ட்விஸ்ட் வைக்கும் பாஜக!