பழனிமலை அடிவாரத்தில் உள்ள தனியார் விடுதியில் துப்பரவு பெண் பணியாளர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

பழனி அடிவாரத்தில் தனியார் தங்கும் விடுயில் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பழனி அடிவாரம் இடுமன் மலை அருகே தனியார் தங்கு விடுதிகள் உள்ளன. இந்த தனியார் தங்கு விடுதியில் காந்தி என்ற பெண் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுதியில் வேலை செய்து வந்த காந்தி என்ற பெண்ணை, பார்க்க வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பெண் டாக்டர் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கோரி, சிபிஐ மேல்முறையீடு; மாநில அரசு மனுவுடன், 27ஆம் தேதி விசாரணை

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த காந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். விடுதி உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடிவாரம் காவல்நிலைய போலீசார் காந்தியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து கொலைக்கு காரணம் முன்விரோதமா? கொலை செய்தது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை; சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை;"வாழ்வின் கடைசி நாள் வரை ஜெயிலில் இருக்கும்படி"அதிரடி உத்தரவு