விஜயின் தவெக இரண்டாவது ஆண்டு விழாவிற்கு 2500 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை எனவும் அவர்களுக்கு காலை உணவு சரியான முறையில் வழங்கப்படவில்லை என தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் 3000 பேர் பங்கேற்று உள்ளனர். நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கி இருந்தாலும் கூட காலையில் 5 மணியிலிருந்து நிர்வாகிகள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கி விட்டார்கள் 6:30 மணியிலிருந்து அவர்கள் நுழைவு வாயில் வழியாக பார்க்கிங் எல்லாம் சரி பார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப் பட்டார்கள்.
இதையும் படிங்க: 'அண்ணன பார்க்கணும்..' தவெக விழாவிற்கு அரை நிர்வாணத்தில் வந்த தொண்டர்..! விக்கித்துப்போன விழா கமிட்டி..!

ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கு மேலாக கடும் பசியுடன் அவர்கள் காத்திருந்தார்கள். இவர்களுக்கு மதிய உணவு மட்டும்தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காலை உணவு பொருத்தவரையில் சிறிய அளவிலான ஜூஸ் பாட்டில் ஒன்றும், ஐந்து பிஸ்கெட்டுகள் கொண்ட ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் அவரவர் இருக்கைகளில் வைக்கப்பட்டு இருந்தது.
இதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் உணவு கொடுக்கப்படவில்லை. இட்லி, உப்புமா போன்ற எந்த காலை சிறுண்டி ஏதும் வழங்கப்படவில்லை. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் வயதானவர்கள் கூட வந்திருக்கிறார்கள். பெண்கள் வந்து இருக்கிறார்கள், சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்துள்ளார்கள். அவர்களுக்கு எந்தவிதமான உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

இளைஞர்கள் விஜயை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் இருந்தாலும் கூட, சிறியவர்கள், 40 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தலைச் சுற்றல், மயக்க நிலையிலும் சோர்வாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர். ''காலையிலே அரங்குக்கு வந்து விட்டதால் எங்களுக்கு சாப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. இருக்கையில் ஒரு சின்ன ஜூஸ் பாட்டிலும், பிஸ்கட் பாக்கெட் வைத்திருந்தார்கள். அதை மட்டுமே சாப்பிட்டிருக்கிறோம். நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் நாங்கள் போய் சாப்பிட வேண்டும்.

வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம் என்று பார்த்தாலும் விழா நடக்கும் இடத்தில் இருந்து கடைகள் எதுவும் இல்லை. மதிய உணவு மட்டும் தான் தற்போது தயாராகி வருகிறது. அருகில் கடைகளோ, வாய்ப்புகளைக் கூட இல்லை. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வெளியில் சென்றால் மட்டும் தான் உணவு கிடைக்கும். ஒரு கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று விட்டால் மீண்டும் உள்ளே விடுவது சந்தேகம். ஏற்கனவே உள்ளே இருப்பவர்களுக்கே இடம் கிடையாது. இந்த இடத்தை விட்டு விட்டால் இடமும் கிடைக்காது என்பதால் நாங்கள் பசியைப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்'' என பலரும் சோர்வாக அமர்ந்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஒரு இலைக்கு ரூ.3000... 21 உணவு வகைகள்… தவெக நிர்வாகிகளுக்கு படையல்..! லிஸ்டில் அப்படி என்னதான் இருக்கு..?