பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 8-ம் தேதி( நாளை) குஜராத்தின் நவ்சாரியில் அம்மாநில அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ‘லக்பதி தீதி சம்மேளனம் எனும் திட்டம் தொடர்பான இந்நிகழ்ச்சியானது, வழக்கத்தை விட மாறுபட்டதாக இருக்க உள்ளது.

ஏனெனில் பிரதமர் மோடி பங்கிற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பெண் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: எம்.பி.யாகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..! மோடிக்கு இனி தலைவலி தான்..!
இது தொடர்பாக உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறுகையில், மகளிர் தினத்தில் நவச்சாரியில் நடைபெறும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாகவும் மகளிர் தின ஏற்பாடாக பெண் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடு இந்திய வரலாற்றில் முதல் முயற்சி என்றும் குஜராத் காவல்துறை இந்த தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நவ்சாரியின் வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கியது முதல் நிகழ்வு நடைபெறும் இடம் வரையிலும் பெண்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபில்கள் வரை அனைவரும் பெண்கள்தான் எனவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,100 கான்ஸ்டபிள்கள், 187 சப்-இன்ஸ்பெக்டர்கள், 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும்,. 16 துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மற்றும் கூடுதல் டிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரியும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாமியார் தோற்றத்தில் பவன் கல்யாண்.. இமய மலைக்கு போறீங்களா?.. பிரதமர் மோடி தமாஷ்..!