கடந்த 2024ம் ஆண்டில் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது 834 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன, இது கடந்த 2023ம் ஆண்டில் நடந்ததாக்குதலைவிட 100 சம்பவங்கள் அதிகம், அந்த ஆண்டில் 734 மட்டுமே நடந்திருந்தது என ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பு(யுசிஎப்) தெரிவித்துள்ளது. ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பு(யுசிஎப்) நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இதைத் தெரிவித்துள்ளது.
அதில் “ இந்தியாவில் தங்களின் நம்பிக்கைக்குரிய மதத்தை பின்பற்றினால்கூட தினசரி 2 கிறிஸ்தவர்கள் வீதம் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன, இது மிகவும் கவலைக்குரியது.
இந்தத் தாக்குதல்கள் பலவிதங்களில் நடந்துள்ளன. தேவாலயங்கள் மீது தாக்குதல், பிரார்த்தனைக் கூட்டங்கள் மீது தாக்குதல்கள், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் மீது தாக்குதல், ஒதுக்கிவைத்தல், பொதுவளங்களை பயன்படுத்துவதில் இருந்து தடுத்தல், பொய்யான குற்றச்சாட்டு, பொய்யான கிரிமினல் வழக்குகள், வலுக்கட்டாய மதம்மாற்றம் செய்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆகியவை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.
பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் மதம்மாற்றத் தடைச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது, இந்துத்துவா ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல்களும், சிறுபான்மையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன.

2024ம் ஆண்டில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது 209 தாக்குல் சம்பவங்கள் நடந்துள்ளன, அதைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் 165 சம்பவங்கள் நடந்துள்ளன. சில நேரங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது, பல நேரங்களில் போலீஸார் புகாரோடு நிறுத்துவிடுகிறார்கள். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரை அணுகி புகார் அளிக்கவும் அச்சப்படுகிறார்கள், போலீஸார் வழக்கை புகார்தாரர் மீது திருப்பிவிடுகிறார்கள் என்ற அச்சம் நிலவியது என்று ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பு கண்டறிந்தது.
இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் விஜய் ரியாக்ஷன்...எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த.. நாட்டிலே...எம்ஜிஆர் பாடலை சொல்லி பதிலடி...

ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.மைக்கேல் கடந்த 2023ம் ஆண்டு தி வயர் தளத்துக்கு அளித்த பேட்டியில் “ பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அல்லது பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீஸார் இறங்குகிறார்கள், ஒருவேளை தாக்குதல் நடத்தியோர் மீது வழக்கு பதிவுசெய்ய வற்புறுத்தினால், போலீஸார் நடத்தை மோசமாக இருந்து, வாழ்வே அச்சுறுத்தலாகிவிடும்” எனத் தெரிவித்தார்.
விளம்புநிலை ஏழைகள் இந்த தாக்குதலில் முக்கியமாக பாதிக்கப்படுகிறார்கள். 2024 டிசம்பரில் மட்டும் 73 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 25 தாக்குதல்கள் பழங்குடியினர் மீதும்,14 தாக்குதல்கள் தலித்கள் மீதும் நடந்துள்ளன, 9 தாக்குதல்கள் பெண்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.

2024, டிசம்பர் 31ம் தேதி 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தலைவர்கள், 30 தேவாலய குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் சேர்ந்து இந்த தாக்குதல் விவகாரத்தில் தலையிடக் கோரி பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் தெளரபதி முர்முவுக்கும் கோரிக்கைவிடுத்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளதால் இந்த கோகரிக்கையை வைத்தனர்.
2024, டிசம்பர் 23ம் தேதி கத்தோலிக்க பிஷப்புகள் பிரதமர் மோடியைச் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்க்கட்சிகளும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் எம்பி. டேரீக் ஓ பிரையன் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் கடுமையான கேள்விகளை மத்திய அரசுக்கு எழுப்பியிருந்தார்.
அகமதாபாத்தில் சமீபத்தில் கிறிஸ்தவ அமைப்பு நடத்திய கூட்டத்தில் ஓ பிரையன் பேசுகையில் “ பிஷப்புகள் பிரதமர் மோடியுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்டால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நீங்களும், தேவாலயங்களும் சேர்ந்து கடுமையான கேள்விகளை கேட்க வேண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறந்த நிர்வாக நாள் என்று மாற்ற முயல்வது ஏன் என்று கேளுங்கள். எப்சிஆர்ஏ சட்டத்தை ஏன் ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கேளுங்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கெளரி லங்கேஷ் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..